கிரேசி மோகன்

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
———————————————————-
‘’கண்ணன் வெண்பாக்கள்’’
——————————————–

ஓவியம் : கேஷவ்
ஓவியம் : கேஷவ்

அவலுக்கு செல்வம், அழகுமயில் ராதை
அவளுக்குக் காதல், விஜயன் -கவலைக்கு,
கீதை, அடியார்தம் கண்ணீர் திவலைக்கு,
தாதை அளிப்பான் துடைப்பு….(130)

 
அவன்தான் குமரன், அவன்தான் களிறு,
அவன்தான் அவன்தங்கை ஆயி, -அவன்தான்,
சிவன்தான் அயன்தான், தவம்தான் வரம்தான்,
அவன்தான் அனேகமான அது….(131)

 
பாமாவின் பாய்ச்சலுக்கு, ருக்மணியின் கூச்சலுக்கு,
ஆமாமாம் போட்டசாமி ஐடியாவாய், -காமாய்,
கவுண்ட்செய்து பார்க்க கிடைத்தது கல்கி,
டவுண்-டு-எர்த் மீண்டும் பிறப்பு….(132)

 
தேவகி நந்தனின், சேவக நந்தகி
ஆவலால் ஓர்கேள்வி அய்யனே, -பூவுளாள்,
வேல்விழிபோல் எப்போதும், மாலன் மருங்கிலே,
வாளாய் இருப்பதேன் வாள்….(133)

 
தீவீரப் பித்தவெடி, வாதம் தகர்த்திட,
வாவீரா வாளேந்தி வெண்புரவி, -மேவி,
கயவர் குலமழித்தோய், கல்கியாய் இன்று,
புவனம் பிழைக்கப் புகு….(134)….

துரியோ தனனும், விருகோ தரனும்,
சரியில் தவறில் சமமே, -அரியின்,
அரசாட்சி தன்னிலே, ஆராய்ச்சி வேண்டாம்,
ஒருசாட்சி யாய்அரி(றி) வோ(ஓ)ம்….(135)

———————————————————————————————————–

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *