–கவிஞர் காவிரிமைந்தன்.

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

 

parthalpasitherum

 

மனித உணர்வுகள் உற்பத்தியாகும் இடம் மூளை என்பது விஞ்ஞான விளக்கமாக இருக்காலாம்.  ஆனால் மனதிடம்தான் என்பது மறுக்க முடியாத உண்மை.  அதுவும் கண்கள் தங்கள் கடமையைச் செய்ய மனம் ஏதோ ஆணைகள் பிறப்பிக்க.. மனிதன் பாவம் ஓடுகின்றான்.. வாழ்க்கைப் பாதையில்..

இச்சைச் செயலா? அணிச்சைச் செயலா? என்று இனம் கண்டு கொள்ள முடியாத செயல்களில் ஈடுபடுகின்றான்.  விளைவுகள் பயனுள்ளதாயின், இதயம் பூரிக்கிறான்.  மாற்று இல்லாத மனதைக் கட்டி ஆளத்தெரியாமல் மனிதன் படும் பாடு.. சொல்லில் அடங்குவதில்லை..

எதிலிருந்து எது?  எதற்குப் பின் எது?  என்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உண்மை புரிகிறது.  இதோ இயற்கையின் சூட்சுமம் கண்டு இதயம் தெளிகிறான்.

கேள்விகள் பிறக்கின்றன! மறுவரியில் பதில்களும் கிடைக்கின்றன.. முதல் வரியும் இரண்டாம் வரியும் ஒற்றைப்புள்ளியில் சந்தித்துக் கொள்கின்றன!

வெறும் காற்றில் தவழ்ந்து வரும் பாடல் அல்ல…  கண்ணதாசன் கற்பனையில் பிறந்துவரும் பாட்டு!  பார்த்தால் பசி தீரும் என்கிற திரைப்படத்தில்.. கேட்டால் சுவைதரும் கானமிது!  கண்ணதாசனே உன் பாடல் சுவை குறையுமோ?  இசையும் கவிதையும் ஏந்திவரும் கவிதை முத்துக்களை இதயம் ஏந்திக் கேட்க வாருங்கள்..  விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையமைப்பில்  செவிகளைக் கெளரவிக்கும் பாட்டு ராஜாங்கமிது!

http://youtu.be/MY05ZtMQZXs காணொளி: -http://youtu.be/MY05ZtMQZXs

படம்: பார்த்தால் பசி தீரும் இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி சுசீலா: கொடி அசைந்ததும் டி.எம்.எஸ்: ம்ம் சுசீலா: காற்று வந்ததா டி.எம்.எஸ்: ம்ஹ…ம் சுசீலா: காற்று வந்ததும் டி.எம்.எஸ்: ம்ஹ…ம் சுசீலா: கொடி அசைந்ததா டி.எம்.எஸ்: நிலவு வந்ததும் சுசீலா: ம்ம் டி.எம்.எஸ்: மலர் மலர்ந்ததா சுசீலா: ம்ஹ…ம் டி.எம்.எஸ்: மலர் மலர்ந்ததால் சுசீலா: ம்ம்ம் டி.எம்.எஸ்: நிலவு வந்ததா சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா சுசீலா: பாடல் வந்ததும் தாளம் வந்ததா பாடல் வந்ததும் தாளம் வந்ததா தாளம் வந்ததும் பாடல் வந்ததா டி.எம்.எஸ்: பாவம் வந்ததும் ராகம் வந்ததா பாவம் வந்ததும் ராகம் வந்ததா ராகம் வந்ததும் பாவம் வந்ததா சுசீலா: கண் திறந்ததும் காட்சி வந்ததா காட்சி வந்ததும் கண் திறந்ததா டி.எம்.எஸ்: பருவம் வந்ததும் ஆசை வந்ததா ஆசை வந்ததும் பருவம் வந்ததா சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா சுசீலா: வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா டி.எம்.எஸ்: பெண்மை என்பதால் நாணம் வந்ததா பெண்மை என்பதால் நாணம் வந்ததா நாணம் வந்ததால் பெண்மை ஆனதா சுசீலா: ஓடி வந்ததும் தேடி வந்ததும் பாடி வந்ததும் பார்க்க வந்ததும் டி.எம்.எஸ்: காதல் என்பதா பாசம் என்பதா கருணை என்பதா உரிமை என்பதா சுசீலா: கொடி அசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடி அசைந்ததா இருவரும்: நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா ம்ஹ…ம் ஹ…ம் ஒஹோ ஹோ..ம்ஹ…ம் ம்ஹ…ம் ம்ஹ…ம்..ஓஹோஹோஹோஹோ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.