கையில் வந்த வெண்ணிலவு

Madhumitha, RS Mani

கவிதாயினி மதுமிதாவின் ‘கையில் வந்த வெண்ணிலவு’ என்ற பாடலுக்கு இசையமைத்துப் பாடியுள்ளார், கனடாவைச் சேர்ந்த ஆர்.எஸ். மணி.

அன்புடன் குழுமத்தின் இசைப் பாடல் போட்டியில் சிறப்புப் பரிசினைப் பெற்ற இந்தப் பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்.

[audio:http://vallamai.com/wp-content/uploads/2010/08/kaiyil-vandha-veNNilavu-final.mp3|titles=kaiyil vandha veNNilavu – final]

இந்தப் பாடலின் வரி வடிவம் இங்கே:

கையில் வந்த வெண்ணிலவு

கையில் வந்த வெண்ணிலவு – உன்
கனவில் வந்த பெண்ணிலவு
காலம் கொடுத்தது உன்னிடமே
காப்பாய் நீயும் கண்ணெனவே         (கையில் வந்த)

காற்றில் கரைந்து சென்றாலும்
கனிவாய் நான் காதலாய் – என்
இதழ் பதிப்பேன்
கண்கள் மயங்கும் வேளையில் – உன்
மேனியில் முத்தக் கவிதைகள் நான்
வரைந்து வைப்பேன்                 (கையில் வந்த)

கலைந்து கிடக்கும் என்னில் உன்னைக்
கலந்து விடுவாய் நீ
கிறங்கும் என் விழி மலர்ந்தபோதுன்
உலகம் மறப்பாய் நீ
திகைத்து நாணம் துடைக்கும் கையைப்
பறித்துப் பார்ப்பாய் நீ – என்
செவ்விதழ் உன் செவிமடல் வருடவே
சிலிர்த்துச் சிரிப்பாய் நீ                  (கையில் வந்த)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கையில் வந்த வெண்ணிலவு

Leave a Reply

Your email address will not be published.