இன்று ஆஷாட ஏகாதசி
இன்று ஆஷாட ஏகாதசி. பலலக்ஷம் வார்க்கரிகள் பாதயாத்திரையாகச் சென்று பண்டரிபுர விட்டலனைத் தரிசிக்கும் தினம். அடிமுதல் முடிவரை ஆராஅமுதமாகத் தித்திக்கும் அந்த அக்காரக் கனியைச் சுவைப்போமா?
சு.ரவி
அமுதப் பதிகம்
இதயம் அமுதம்,இன்முகம் அமுதம்
இணைவிழி அமுதம், இன்னருளமுதம்
இதழ்கள் அமுதம், இளநகை அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 1`
மொழியும் அமுதம், மௌனம் அமுதம்
மூச்சும் அமுதம், முகில்நிறம் அமுதம்
மழலை அமுதம், மயிலிறகமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 2
குழலிசை அமுதம், குரலொலி அமுதம்
குளிர்நுதல் அமுதம், குழல்சுருள் அமுதம்
கழலிணை அமுதம், கரமலர் அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 3
நடனம் அமுதம், நடைஅழ கமுதம்
நட்பும் அமுதம், பகையும் அமுதம்
இடவலம் அமுதம், இகபரம் அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 4
ராதை அமுதம், காதல் அமுதம்
ராகம் அமுதம், மோஹம் அமுதம்
கோதை அமுதம், கோபியர் அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 5
பாதை அமுதம், பயணம் அமுத்ம்
பார்வை அமுதம், பாற்கடல் அமுதம்
கீதை அமுதம், கிளரொளி அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 6
கனவும் அமுதம், நனவும் அமுதம்
கனிவும் அமுதம், முனிவும் அமுதம்
ஜனனம் அமுதம், மரணம் அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 7
அறிதுயில் அமுதம், அரவணை அமுதம்
யமுனை அமுதம், யதுகுலம் அமுதம்
உறிதயிர் அமுதம், உண்பதும் அமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 8
துயரம் அமுதம், துணையும் அமுதம்
துகளும் அமுதம், துளசியும் அமுதம்
பெயரும் அமுதம், பேரழகமுதம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 9
உருவம் அமுதம், உணர்வும் அமுதம்
உள்ளொளி அமுதம், உயிர்நிலை அமுதம்
அருவம் அமுதம், அன்பே அமுத்ம்
ஆராஅமுதே அகிலம் அமுதம்! 10