கிரேசி மோகன்

Bhagavatha:  Amritha and the Mohini avatara  - Keshav
Bhagavatha: Amritha and the Mohini avatara – Keshav

கண்னன் திருப்புகழ்….
—————————————–
’’கண்ணன் வெண்பாக்கள்’’
———————————————–

Bhagavatha - Grace on Yashoda - Keshav
Bhagavatha – Grace on Yashoda – Keshav

அண்ணன் வடமதுரை, தங்கையோ தென்மதுரை,
வண்ணம் இருவருமே வான்முகில், -முன்னொருநாள்,
ஓசையின்றி கோகுலம், ஓடியிடம் மாறியதால்,
மீசையின்றி கண்ணன்மீ னாள்….(338)

அண்ணனுக்கு முன்னமே, ஆயர் குலமுதித்து,
அன்னை யசோதை அமுதினை, -உண்ணவந்த,
அம்பிகே ஆயினன், எம்பிரான் கோகுலத்தில்,
தம்பியாய் பின்பிகுந்த தால்….(339)

சரணா கதியென்று, சாகேத ராமன்,
இருதாள் பணிந்து இருப்போர்க்(கு), -அரணாய்,
அரியவன் கோதண்ட, அம்புகள் நிற்கும்,
நெறியவன் காதை நமக்கு….(340)

நீல பத்பநாபன் ’’பள்ளிகொண்டபுரம்’’ நாவலை
இரா.முருகன் படிக்கத் தந்தபோது….
—————————————————————————————

கேசம் திருவல்லா, கால்கள் திருவாப்பூர்,
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி, -வாசனாய்,
நீளப் படுத்தவரே, நீலபத்ம நாபரே,
கோலத் திருவுருவே காப்பு….(341)

கேசம் திருவல்லா, கால்கள் திருவாப்பூர்,
சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி, -வாசா,
பதினெட்டு மைலாய்ப், படுத்தோய் எனக்கு,
விதியெட்டா வாழ்வை வழங்கு….(342)

நாளுழி காலத்தில், ஆலாழி தெப்பத்தில்,
பாலாழி வாய்கொண்ட பாலகனாய், -நீளாழி
நீந்திக் கழித்தன்நாள், ஞாலம் வகுப்போய்ஏ,
காந்தப் பெருக்கலைக் கூட்டு….(343)

சுள்ளிகொண்டாய், காகா சுரனை விலக்கிட,
கொள்ளிகொண்டாய் புள்ளீமக் காரியமாய், -அள்ளியன்று,
வள்ளிகண்டம் கட்டிய, வேலனார் மாமனே,
பள்ளிகொண்ட பாற்கடலோய் பார்….(344)

——————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமால் திருப்புகழ் (137)

  1. எதுகை, மோனை. சொல்லாக்கமெல்லாம் அருமை. வாழ்த்துகள் மோகன். கே.ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *