நூலாறு 2010: வேலூர் புத்தகக் கண்காட்சி

0

தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் சென்னையை அடுத்த மிகப் பெரிய நகரம் வேலூர். வரலாற்றுப் புகழ்வாய்ந்த இந்த மாநகரத்தின் சிறப்பே கல்வியிலும் மருத்துவத்திலும் இது உலகப் புகழ்வாய்ந்த நிறுவனங்களைக் கொண்டிருப்பதுதான். வேலூர் கோட்டை, சி. எம். சி., வி. ஐ. டி., ஸ்ரீபுரம் போன்ற புகழ் பெற்ற இடங்களின் சங்கமம் வேலூர்.

இத்துணை சிறப்புமிக்க வேலூரில் வேலூர் வாசகர் பேரவையும், ஆழி அறக்கட்டளை ஆகியவை இணைந்து, வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் 2010 ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடத்த உள்ளன.

இந்தப் புத்தகக் கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து 160க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் மென்பொருள் நிறுவனங்களும் இதர நிறுவனங்களும் கலந்துகொள்ள உள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக நடைபெறவிருக்கும் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியாக இக்கண்காட்சி அமையும்.

மேலும் கண்காட்சியின் மற்றொரு பிரதான நிகழ்வான மாலை நேரக் கூட்டங்களில் பேச, பிரபல தலைவர்கள், திரைப்படத் தொலைக்காட்சி பிரபலங்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் அழைத்து வரப்பட உள்ளனர்.

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கும் தமிழ்க் கணினி மற்றும் வீக்கிபீடியா, வலைப்பூ எழுதுதல், லினக்ஸ் பயிலரங்கு எனப் பல்வேறு கணினி சார்ந்த பயிற்சிகளும் அரங்கில் இடம்பெற உள்ளன. உடன் சங்க கால உணவுக் காட்சியும் இடம் பெற உள்ளது.

தமிழகத்தின் முக்கிய அரசியல், சமூகத் தலைவர்கள், புகழ்பெற்ற பேச்சாளர்கள், திரைப்பட, தொலைக்காட்சி ஊடக பிரபலங்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், சாதனையாளர்கள் பங்கேற்கும் தினசரி அரங்கங்கள் நிகழ்வின் ஒரு பகுதியாக அன்றாடம் மாலையில் நடைபெறுகின்றன. வரலாற்றுச் சுவடு என்ற தலைப்பில் வேலூர் மற்றும் இதர மாவட்டங்களின் வரலாற்றுச் சிறப்புகளைப் பற்றிப் பேச வரலாற்று அறிஞர்கள் வரவிருக்கின்றனர்

நூல் வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள், நூலாசிரியர் சந்திப்புகள் ஆகியவற்றை நடத்த தனி அரங்கு கண்காட்சிக்கு உள்ளாகவே அமைக்கப்படுகிறது. முதலில் வருபவர்க்கு முன்னுரிமை என்கிற வகையில் எல்லாப் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் இந்த வாய்ப்பைப் பெறலாம்.

எனவே இக்கண்காட்சியில் உங்கள் நிறுவனங்களின் சேவைகள், கல்வி நிறுவனங்கள், உற்பத்திப் பொருட்கள், கணினி சார்ந்த மென்பொருட்கள் என எல்லாத் துறையினரும் அனைத்துத் துறையினரும் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் சேவைகளை இக்கண்காட்சிக்கு வரும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களிடம் சென்று சேர்க்க வரும்படி அனைவரையும் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்:
செந்தில்நாதன்: 99401-47473,
கணினி சார்ந்தவற்றிற்கு: செல்வ.முரளி 99430-94945

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *