-மலர்சபா

மதுரைக் காண்டம் – 02. வேட்டுவ வரி

கொடை

இளமையும் கருமை நிறமும் கொண்டaa
எயினர் மகளே!
நின் தமையன்கள் முன்பு
பகைவர்களை வென்று
கவர்ந்துவந்த பசுக் கூட்டங்கள்
கொல்லன், துடியன்,
பாட்டுகள் தாளத்துடன் புணர்க்கவல்ல
நல்ல யாழ்ப்பாணன்…ஆகியோர்
வீட்டின் முன்வாயிலில் நிறைந்துநிற்கின்றன.
காண்பாயாக!

மயிலின் அடியைஒத்த
முற்றிடாத நகையுடையவளே!
நின் தமையன்கள் முன்பு
கரந்தையர் அலற அலறக்
கவர்ந்து வந்த பசுக்கூட்டங்கள்
கள்விற்பவள், நல்ல உளவறிந்து கூறும் ஒற்றன்,
நல்லசகுனப்பொருத்தம் கூறும் சோதிடன்…ஆகியோர்
வீட்டின்முன் நிறைந்து நிற்கின்றன.
காண்பாயாக!

குளத்துக்கண் உள்ள தாமரை மலர் போன்ற
மையுண்ட கண்களை உடையவளே!
நின் தமையன்கள் முன்பு
பகைவர்கள் வருந்தி அலறிக் கூவி
ஊரையே கூட்டிய வண்ணம்
கவர்ந்து வந்த பசுக்கூட்டங்கள்
கொச்சை மொழியும், நரைத்த தாடியும் உடைய
முதிய மறவர் மறத்தியர்
வீட்டு முன்றிலில் நிறைந்து நிற்கின்றன.
காண்பாயாக!

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் பாடல்கள் இங்கே:  14 – 16
http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

படத்துக்கு நன்றி
http://ta.wiktionary.org/wiki

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *