-ரா. பார்த்தசாரதி

சென்னையின் வயது முன்னூற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் !
இங்கே நாம் காணும் பல  வளர்ச்சிகள், காணப்படும்  அதிசயங்கள், கெட்டும்  பட்டிணம்  சேர்  என்ற  பழமையான  பழமொழிகள் பலதரப்பட்ட  மக்கள் வளர்ச்சி அடைந்ததற்கு எடுத்துகாட்டுக்கள் !

சென்னைக்குத் தனிமொழி,
நடிகர் ரஜனிக்கும் தனிவழி!
தேன் மதுரத் தமிழ் எல்லா மொழியிலும்  இருப்பதுண்டு ,
வாஞ்சைகொஞ்சும்  நெல்லைத் தமிழ்,
மரியாதை மிளிரும் கொங்குத் தமிழ்,
நாஞ்சில் தமிழ், மதுரைத் தமிழ், கலப்பு மிகுந்த சென்னைத் தமிழ்!

சென்னைத் தமிழ் சற்றே வித்தியாசமாய் இருந்தாலும்
பலதரப்பட்ட மொழியினரும், சமயத்தவர்களும் இருந்தாலும்,
வேற்றுமையில் ஒற்றுமை இன்றும் இங்கே பரவி இருக்கின்றதே!

பன்மொழிச் சொற்கள் கலப்பு, பல்வேறு இனம்,
பலவிதக் கலாசாரத் தொடர்பு, இவையே சென்னையின் அடையாளம்!
திரைப்படம் வாயிலாகச் சென்னைத் தமிழ் பல பகுதிகளில் பரிச்சயம்!
இதுவே சென்னைத் தமிழ் உலாவிவரும் அதிசயம் !

புராதனக் கோவில்கள், கலங்கரை விளக்கங்கள் !
பழமை மிகுந்த மாளிகைகள்,  துறைமுகங்கள் !
கன்னித் தமிழ் மாறா நூலகங்கள், உருவச்சிலைகள் !
பாலங்கள், சிறந்த கடற்கரைகளும் காணப்படுகின்றதே!

பல பிரபலங்களைச் சென்னை தன்னகத்தே கொண்டதே !
கனகசபைப் பிள்ளை, பிரகாசம் பந்துலு, முத்துஸ்வாமி தீட்சதர்,
கணிதமேதை ராமனுஜம், பாலசரஸ்வதி, மற்றும்
இந்தியாவில் முதல் மருத்துவப் பட்டம் பெற்ற முத்துலட்சுமி ரெட்டி ! 

நிறை பற்றிப் பேசினாலும் குறையில்லா நகரம்இல்லை !
குப்பைக் கிடங்காய்க் கூவம் ஆற்றைச் சுத்தபடுத்த முடியவில்லை!
புராதனக் கட்டிடங்கள் பல பராமரிக்கப்படவில்லை!
சாலைகளும், போக்குவரத்தும் முறைப்படுத்தவில்லை !

பாலங்கள் அதிகமானாலும், ஆங்காங்கே பள்ளங்கள் அதிகம்!
உயரிய கட்டிடங்கள் அதிகமானாலும் உண்மைத்தரம் இல்லை !
தொழிற்சாலைகள் வளர்ந்தாலும், தொழிலாளர்களின் நலன் இல்லை !
அரசிடமும், அரசியல்வாதிகளிடமும்,
லஞ்சம் தலைதூக்காமல் இல்லை !

சென்னையில் கேளிக்கைப் பூங்காக்களும், மலர்ப் பூங்காக்களும் உள்ளதே!
என்றும் இதை அமைதிப்பூங்காவாக ஆக்குவது நமது கடமையே !
சென்னைவாசிகள் மனம்வைத்தால் இவைகள் என்றும் சாத்தியமே !
நற்செயலால் நமது நகரத்தைச் சொர்க்கமாக்கக் கை கொடுப்போமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *