6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
நோயற்று வாழட்டும் உலகு’
ஓம் ஸ்ரீ மகா பீடம் ஸ்ரீ ஓம் மகா பீடம் ஹரி ஓம் மகா பீடம்
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் விரைவில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள 6 அடி உயரமுள்ள ஸ்ரீ யக்ஞ ரூபிணி மகா ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி தமிழகம் முழுவதும் கரிக்கோல பவனி தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி
இந்தக் கலியுகத்தில் மனிதர்களுக்கு இருக்கிற மிகப் பெரிய சவால் & எப்படி நிம்மதியைப் பெறுவது என்பதில்தான் இருக்கிறது. எத்தனைதான் அனுசரணையாக நடந்து கொண்டாலும், எத்தனைதான் சம்பாதித்தாலும், எத்தனைதான் பரிகாரங்களைச் செய்து வந்தாலும் மன நிம்மதி என்பது ஒருவர் எதிர்பார்ப்பது மாதிரி அமைய மாட்டேன் என்கிறது.
இறை பக்தியின் மூலமும், சிரத்தையான வழிபாட்டின் மூலமும்தான் நிம்மதியை ஒருவர் பெற முடியும். வாழ்க்கையில் மென்மேலும் ஒருவர் உயர உயரத்தான் அவருக்குப் பல விதமான சங்கடங்கள் வருகின்றன. அதாவது போட்டி, பொறாமை போன்றவற்றால் பலவிதமான அவஸ்தைகள் வந்து சேர்கின்றன. இவற்றைக் களையத்தான் வழிபாடுகளும், பரிகார பூஜைகளும் உதவுகின்றன.
குறிப்பிட்ட ஒரு தெய்வத்தைக் குறித்தோ, குறிப்பிட்ட ஒரு மகானின் அதிஷ்டானத்தைத் தரிசித்தோ ஒருவர் நிச்சயமாக மன நிம்மதியைப் பெற முடியும். உள்ளார்ந்த பக்தி சிந்தனையுடன் வழிபடும் அன்பர்களுக்கு தெய்வங்களும் மகான்களும் வேண்டுவனவற்றை அருளி வருகிறார்கள்.
வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகரும், நிறுவனருமான டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் சொல்கிறார்.
”இன்றைக்கு மனிதர்களுக்கு வருகின்ற வியாதிகள் இன்னதுதான் என்று சொல்வதற்கில்லை. பிறந்த குழந்தைக்கும்கூட வியாதிகள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு வகையான வியாதிக்கும் அதற்கென்று தேர்ந்த டாக்டர்கள் அதாவது ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருக்கிறார்கள்.
அதுபோல் மனிதர்களுக்கு எந்த நேரத்தில் எது தேவையோ அவற்றை வழங்குவதற்குப் பல தெய்வங்கள் இருந்து வருகின்றன. பல மகான்கள் சூட்சும தேகத்துடன் மனிதர்களின் பிணிகளை விரட்ட நடமாடி வருகிறார்கள்.
மனிதர்களின் அனைத்து பிணிகளையும் போக்குவதற்குத்தான் எண்ணற்ற தெய்வ சந்நிதிகளும், மகான்கள் சந்நிதிகளும் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ளன. இந்த உலகில் வசிக்கின்ற அனைவரும் தங்களுக்குத் தேவையான பிரார்த்தனையை முன்வைத்து இந்த பீடம் வந்து செல்கின்றனர்.
விதிவசத்தால் நமக்குள்ள குறைகளை அறவே போக்குவதற்கும், குறைகளின் வீர்யத்தைக் குறைப்பதற்கும் ஹோமங்கள் நடத்துகிறோம். எனவேதான், இந்த தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஹோமங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. தற்போது ஸ்ரீபிரத்யங்கிரா தேவியின் கல் விக்கிரகம் தமிழகம் முழுதும் கரிகோல பவனி துவங்கி உள்ளது. உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளின் நலன் வேண்டியும், மனிதர்களின் மனதில் உள்ள துன்பங்களும் துயரங்களும் நீங்கி அவர்களின் முகத்தில் என்றென்றும் மகிழ்ச்சி பரவவும், போதுமான மழை பெய்து நீர்நிலைகள் பெருகி விவசாயிகள் மகிழ்ச்சி பெற வேண்டியும், என்னென்ன வியாதியால் அன்பர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அந்த நோய்கள் நீங்கவும், வாழ்வில் சகல விதமான ஐஸ்வர்யம் பெருகவும் வேண்டி இந்த கரிகோல யாத்திரை அன்னையின் அருளாசியோடு அமர்க்களமாகத் துவங்கி உள்ளது.
தெய்வம் உலா வருகிறது என்றால், பலரது மன வேதனைகளையும், உடல் பிணிகளையும் தீர்த்து அவர்களுக்கு நல்லருள் புரிவதற்காகத்தான் இப்படிப்பட்ட வலம் நடக்கிறது. அதனால்தான் தெய்வம் நமது இல்லம், நகரம், கிராமம் மற்றும் பொது இடங்களில் தேடி விரும்பி வரும்போது உரிய முறையில் அந்த தெய்வத்தை வரவேற்று, மரியாதைகளை செய்ய வேண்டும். விக்ரகமானது ப்ரதிஷ்டையாகி விட்டால் அந்த பாக்யம் நமக்கு கிடைக்காதல்லவா!
இந்த யாத்திரையின்போது பக்தர்கள் வேண்டிக் கொள்ளும் இடங்களுக்கோ, அலுவலகங்களுக்கோ, கல்வி சாலைகளுக்கோ, பொது இடங்களுக்கோ, திரளான பக்தர்கள் வசிக்கும் காலனிகளுக்கோ, அல்லது உங்கள் வீடுகளுக்கோ ஸ்ரீபிரத்யங்கிரா தேவியை வரவழைத்து சிறப்பு யாகம் செய்ய வேண்டுமானால், நடத்திக் கொள்ளலாம். எனது பீடத்தின் சேவகர்களுடன் நானே நேரில் வந்து உங்கள் வாழ்க்கை வளம் பெற யாகம் நடத்தித் தருகிறேன். தேவைப்படுபவர்கள் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தைத் தொடர்பு கொள்ளவும்.
இந்த கரிகோல யாத்திரையின்போது ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பிரசாதங்கள் அனைத்தும் பக்தர்களுக்குக் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீதன்வந்திரி பகவானின் பிரசாதங்களான ரக்ஷை, தேன், சூரணம் உள்ளிட்ட அனைத்து பிரசாதங்களும் கிடைக்கும். மகா பீடம் பிரதிஷ்டைக்குத் தேவைப்படும் மந்திரங்கள் எழுத வேண்டிய நோட்டுகளும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும்.
கரிகோல யாத்திரை பூர்த்தி ஆன பின் அர்த்த மேருவுடன் இந்த பிரத்யங்கிரா தேவி மகா பீடத்தில் அமர்ந்து, தன்னைத் தேடி வருவோரை ஆசிர்வதிக்க உள்ளாள். கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அதுபோல் இந்த பிரத்யங்கிரா தேவி பார்ப்பதற்கு ஆயுதங்கள் தரித்திருந்தாலும், புன்னகை ததும்பும் முகத்துடன் காணப்படுகிறாள். இந்த தேவியின் திருமுகத்தை ஒரு முறை நாம் தரிசித்தால் அவள் நம்மை ஆட்கொண்டு விடுவாள்.
மடியில் ஐஸ்வர்ய கலசத்தை ஏந்தியும் இந்த பிரத்யங்கிரா தேவி மகாபலிபுரம் பிரகாஷ் சிற்ப கலைக்கூடம் ஸ்தபதி திரு.லோகநாதன் அவர்கள் மூலமாக 6அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளாள். பிரத்யங்கிரா தேவிக்கு நடக்கும் வழிபாடுகள் ஆதார பீடத்தில் உள்ள அர்த்த மேருவையும் சென்றடையும். ஒரே நேரத்தில் அன்னையையும், அர்த்த மேருவையும் ஆராதித்த பலன் பக்தர்களுக்குக் கிட்டும்.
மன அமைதி, பகைவர் தொல்லைகளை விரட்டுதல், தோஷங்களை நிவர்த்தி செய்தல், தீவினைகளை விரட்டுதல் போன்ற பிரார்த்தனைகளுக்கு இந்த தேவியை பிரார்த்தித்தால் நல்லது.
அன்னை பிரதிஷ்டை ஆன பின் ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற தினங்களில் விசேஷமான மிளகாய் யாகம் நடைபெறும். யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் ப்ரீதியான மிளகாயுடன் தரிசிப்பதும் மிகுந்த நன்மை தரும். அவளை அண்டினால், நாம் கேட்கும் சகல வரங்களையும் அவள் அருள்வாள்” என்று பூர்த்தி செய்தார் டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்.
குறிப்பு : உடல் நலம், மன நலம் காக்கும் விதத்தில் வாலாஜா, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உள்ள ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீசுதர்சனர், ஸ்ரீஆரோக்ய லக்ஷ்மி உத்ஸவர் விக்ரகங்களைக் கொண்டு தமிழகத்தில் ஆங்காங்கே தன்வந்திரி ஹோமங்கள் நடத்தி வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
தன்வந்திரி நகர், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை : 632 513. வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
தொலைபேசி: 04172 : 230033 | மொபைல்: 94433 30203
www.dhanvantripeedam.com | e-Mail : danvantripeedam@gmail.com