மாறன் குற்றவாளியா? – CBI அறிக்கை – செய்திகள்

புது தில்லி : 06 ஜுலை 2011.  நடுவண் புலனாய்வுச் செயலகம்(CBI), உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்த 2G ஊழல் விசாரணை அறிக்கையில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை குறித்து குறிப்பிட்ட விவரங்கள் :

1. தொலைத் தொடர்புத்துறையின் அலுவலர்கள் அனைவரும் ஏகமனதாக சிபாரிசு செய்தும், ஏர்செல் நிறுவனதின் கோப்புகளை பற்றி முடிவெடுப்பதில் அவசியமில்லாமல் காலம் கடத்தினார் தயாநிதி.

2. ஏர்செல் நிறுவனதின் 74 சதவிகித பங்குகளை மாக்ஸிஸ்(Maxis) நிறுவனத்திடம் (இந்நிறுவனம் மாறன் சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமானது) விற்க, ஏர்செல் நிறுவனதின் உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தித்தார்.  மேலும் ’தொலைத்தொடர்பு அனுமதி’(telecom licenses) வழங்க மறுத்தார்.  இதைப் பற்றி சிவசங்கரன் ஏற்கனவே நடுவண் புலனாய்வுச் செயலகத்திடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

3. அவசியமில்லாமல் ஏர்செல் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் குறித்து பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

அரசுத்துறையைச் சார்ந்த பல அலுவலர்களும், 2001 முதல் 2008 வரை நடந்த அனைத்து தகவல் தொலைத்தொடர்பு சார்ந்த விவகாரங்களை CBI விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். 2G ஊழல் விசாரணை குறித்து, தயாநிதி மாறன், பிரதமரை சந்தித்து தன்னிலை விளக்கம் அளிக்க இரண்டு முறை முயற்சித்துள்ளார்.  இதுவரை அந்த சந்திப்பு நடைபெறவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் பல ஓய்வு பெற்ற நீதிபதிகளும் தெரிவித்துள்ள கருத்து : “நடுவண் புலனாய்வுச் செயலகம்(CBI) தனது விசாரணையை தொடரவேண்டும்.”

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கருத்து : ”தயாநிதி மாறன் குற்றங்களுக்கு தார்மீகப் பொறுப்பு ஏற்று பதவி விலக, பிரதமர் காத்திருப்பது கூடாது.  அவரை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்க சரியான நேரம் வந்துள்ளது.”

தி.மு.க. வின் கருத்து, “காங்கிரஸ் மேலிடத்தின் முடிவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.  இதுவரை காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து அலுவலக ரீதியான தகவல் ஏதும் வரவில்லை.”

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.