கொடு இறைவா!

புவன் கணேஷ்

Bhuvan Ganeshதோல்வி கண்டு துவளா மனம்,
துன்பம் கண்டு தளரா உறுதி,
ஏழ்மை கண்டு உருகும் உள்ளம்,
என்றும் உழைக்கும் எண்ணம்…
இவற்றைக் கொடு.

அன்பு காணா இதயத்திற்கு
அன்பு காட்டவும்,
பாசம் காணா குழந்தையின்
பா¢தவிப்பை அகற்றவும்,
ஏழ்மையில் அழும் உள்ளத்தை
உச்சி முகரவும்
எனக்குக் கற்றுக் கொடு.

மீண்டும் மீண்டும்
உதவும் எண்ணம்,
என்றும் ஊற்றெடுக்கும்
உலராத மனம் கொடு.

வற்றாத செல்வ வரத்திற்கு
வழி செய் – அதே போல்
தேவைக்கு மிஞ்சியது
தேவையுள்ளவரை அடைய
என் மனப் பாத்திரத்தில்
ஓட்டையும் விட்டு வை!

உண்மைத் தேவை உள்ளவர்,
உதவியற்றவர் – போன்றோர்
என் கண் முன் வர
கருணை செய்.

மணற் கேணியாய்
என் மனத்துள் – என்றும் வற்றாது
இரக்கம் சுரக்க, என் மீது
இரக்கம் வை, இறைவா!

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கொடு இறைவா!

  1. I Read Mr.Bhuvan Ganesh, hope this new writer got a good and wonderful career in tamil literature !!!! may almighty shower happiness in his life!!!

Leave a Reply

Your email address will not be published.