சுதந்திர தின விழாவில் நடிகர் ஷாம்
‘செஸ்’ என்ற குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பினர், ‘அபாக்’ என்ற அமைப்புடன் இணைந்து, 2010 ஆகஸ்டு 14 அன்று, சுதந்திர தின விழாவைக் கொண்டாடினர். இதில் நடிகர் ஷாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் பேசியது:
“இது, எவ்வளவோ பாடுபட்டுப் பெற்ற சுதந்திரம். இதைத் தவறாகப் பயன்படுத்தாமல் நேர்மையான முறையில், மனிதத்தோடு வாழ்வதே உண்மையான சுதந்திரம். இந்நாளில் நாம் சுதந்திரத்தோடு வாழ உயிர்நீத்த தியாகிகளுக்கு என் வணக்கங்களை நினைவுகூர்கிறேன்.
“நாம் வளரும் குழந்தைகளுக்கு உண்மையான சுதந்திரத்தைச் சொல்லித் தர வேண்டியது அவசியம். அதற்குக் கல்வி அவசியம். அந்தக் கல்வியை டாக்டர் மனோரமா அவர்களைப் போன்றோர் செய்து வருகிறார்கள்.
“இங்கே வந்த பிறகு, பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும்போது, நானும் என்னை இதில் இணைத்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இனி வரும் காலத்தில் என்னால் இயன்றவரை உதவிகளைச் செய்வதோடு… விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பேன்.”
இவ்வாறு அவர் பேசினார்.
எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சான்றிதழ்களையும் நலத்திட்ட உதவிகளையும் ஷாம் வழங்கினார்.