மயங்கும் மனதின் நீர்க் கோலம்!
திரு.அரசு
கசக்கி எறிந்த காகிதமாய் என் இதயம்
கோபம் மறைந்தும் சாபம் மறையா காலம்
உன்னை நினைத்த பாவம் ரம்பமாய் அறுக்க
குருதி வடியும் என் ரணத்தை மறைக்க
புன்னகை வீசி பொழுதைக் கழித்து என்னை
மறக்க நினைக்க உன் வதனம் முன்வந்து
கறந்த பாலில் நெய் கலந்தாற் போல
உருகி கலந்து நோயாய் மாறி பாவியெனை
கறுகி மாய்ந்து நலிந்து போகச் செய்ய
யாத்த இலக்கியமும் சோக கீதமாய் ஆனதே!