சிறந்த எழுத்தாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு!
ஒரு முக்கிய செய்தி – சிறந்த எழுத்தாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு
வாதினி இதழும் அதன் கௌவர ஆசிரியரும் இணைந்து எழுத்தாளர்களை கௌரவிக்க திருமதி.சாரதாம்பாள் விருது வழங்க முன் வந்துள்ளோம்.
2013 ஜனவரியிலிருந்து 2014 டிசம்பர் 31 வரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் நாவல்களின் ஐந்து படிகளை எழுத்தாளர்கள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சுப்ரஜா
மேற்பார்வை வாதினி
19/29,ராணி அண்ணா நகர்,
கே.கே.நகர்,
சென்னை 600 078.
உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் தமிழ் எழுத்தாளரும் கலந்து கொள்ளலாம்.
விதிமுறைகள்;
1.விருதுக்கு அனுப்பப் படும் ஆசிரியர் பற்றிய தன் விவரக் குறிப்பு அவசியம்.
2.அவர் முழு நேர எழுத்தாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
3.நாவலோ, சிறுகதைத் தொகுப்போ வேறு எந்த ஒரு உள் நாட்டு அமைப்பிலும் வெளி நாட்டு அமைப்பிலும் பரிசு வாங்கியிருக்க கூடாது.
4.நாவல் அல்லது சிறுகதைத் தொகுப்பு குறைந்தது 160 பக்கம் இருக்க வேண்டும்.
5. ஒருவரே எத்தனை நாவல்கள் அல்லது சிறுகதைத் தொகுதியும் அனுப்பலாம்.
6. அந்த நூல் தனது சொந்தக் கற்பனையில் எழுதப்பட்டது எனவும்,வேறு எந்த மொழியில் அல்லது திரைப்படத்தில் வந்த கதையின் பாதிப்பில் எழுதியது இல்லை என்கிற உறுதி மொழி கடிதம் அனுப்ப வேண்டும்.
7. போட்டிக்கு என்றே எழுதுபவர்கள் சாஃப்ட் காபி அனுப்பினாலும் டைப் செய்யப்பட்ட அல்லது கையெழுத்தில் எழுதிய நாவல் அல்லது சிறுகதைத் தொகுதியை அனுப்ப வேண்டும்.
8. எந்த நாட்டில் வசிப்பவராய் இருந்தாலும் அவரது விலாச அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும்.
9. எந்த காரணம் கொண்டும் நேரடி தொடர்பு கொள்ளக் கூடாது.
10. புத்தகமாக வராத நாவலோ சிறுகதைத் தொகுப்போ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டால் அதன் முதல் அச்சு உரிமை மட்டும் ‘வாதினி’யைச் சாரும்.
11. வருடா வருடம் தரப் போகும் இந்த விருது போட்டியில் முதல் முறை பரிசு பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம்.
12. போட்டியில் கலந்து கொள்பவர்கள் முக்கியமாக ‘வாதினி’ இதழின் சந்தாதாரர் எண்ணை குறிப்பிட வேண்டும்.
13 . முதல் இதழில் பிற விவரங்களும் தரப்படும்.
14. மேலும் விருதுத் தொகை நேரிடையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
15.போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் அதற்குரிய இடத்தில் குறிப்பிட வேண்டும்.
