தமிழ் திரை மற்றும் இசைத் துறையில் ’சோனி’யின் முதலீடு – செய்திகள்
இந்த ஆண்டு நான்கு மில்லியன் டாலர் அளவிற்கு தமிழ்த் திரை மற்றும் இசை சார்ந்த சந்தையில் முதலீடு செய்யவிருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்னிந்திய இசைச் சந்தையில் தனது வட்டத்தை பெரிதாக்கும் வகையில், தின்க் ம்யூசிக் என்னும் நிறுவனத்தின் பங்குகளில் 50% சோனியால் வாங்கப்பட்டுள்ளது. மேலும் அனாக் ஆடியோ, ஐங்கரன் மற்றும் கீதாஞ்ஜலி ஆடியோ ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது சோனி நிறுவனம்.
இது குறித்து சோனி நிறுவனத்திற்கான இந்திய மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர் திரு ஸ்ரீதர் சுப்ரமனியன் தமது அறிக்கையில் : “தமிழ் இசையுலகின் தாக்கத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் சோனி நன்கு உணர்ந்துள்ளது. தின்க் ம்யூசிக் நிறுவன பங்குகளை வாங்கியதன் மூலம், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தும், மேலும் பல செயல்பாடுகளாலும், இந்த ஆண்டு சோனி நிறுவனம் நான்கு மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.”