மலேசியாவில் வள்ளலார் மாநாடு – செய்திகள்

2

 

வடலூர் வள்ளலார் என்று அழைக்கபடும் சுவாமி இராமலிங்க அடிகளின் நெறிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “உயிர் இரக்க மாநாடு”, ஜூலை மாதம் 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் கோலாலம்பூர், ஜாலான் துன். எச். எஸ்.லீ. ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் தேவஸ்தான மண்டபத்தில் நடைபெறும். இம்மாநாட்டில் வள்ளலாரின் கருத்துக்களை மக்கள் அறியச் செய்வதற்காக தமிழகம் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த வள்ளலார் குறித்த ஆய்வாளர்கள் பலரும் சொற்பொழிவுகள் நிகழ்த்துவர்.  சுமார் 1000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

படத்திற்கு நன்றி :

http://www.tamilhindu.com

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மலேசியாவில் வள்ளலார் மாநாடு – செய்திகள்

 1. அருட்பிரகாச வள்ளலார் விழா இனிதே நடக்கட்டும்.
  வள்ளலார் ஒரு உண்மையான ஆன்மீகத் துறவி. அவர்
  உண்ணா நோன்பு இருந்தவர் தாம். ஆனால் வள்ளுவரின்
  “ஆற்றுவார் ஆற்றல்பசி ஆற்றல் அப்பசியை
  மாற்றுவார் ஆற்றலின் பின்” என்ற குறளை எண்ணியவுடன்,
  தன் பசியைப் பொறுக்கும் ஆற்றலை விட பிறர் பசியைப்
  போக்கும் ஆற்றல் தான் உயர்ந்தது என்பதை உணர்ந்தவுடன்,
  வடலூரில் சத்திய தருமச் சாலையை நிறுவி அங்கு வரும்
  அன்பர்கள் அனைவருக்கும் உணவு இலவசமாக வழங்க
  ஏற்பாடு செய்தார். இன்றும் அப்பணி தொடருகிறது.
  R.THEETHAARAPPAN, RAJAPALAYAM

 2. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  Please follow
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
  (First 2 mins audio may not be clear… sorry for that)
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (Part 2)
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *