எப்படியும் வாழ்கிறான்!
—மணிமுத்து.
இன்று வழக்கத்தை விட நேரமாகிவிட்டது, ஆகவே மிதிவண்டியை வேகமாக அழுத்திக் கொண்டிருந்தாள் அவள். சிக்னல் கூட தன் பங்கிற்கு உதவி செய்தது அவளுடைய நேரத்தை நீட்டிக்க.
எனவே சுற்றி இருப்பவர்களிடம் பார்வையை ஓட்டினாள். சுறுசுறுப்பான காலைவேளை என்பதால் அனைவரும் கைகடிகாரத்தை பார்ப்பதும் மீண்டும் சிக்னலையும் பார்த்தபடி இருந்தனர்.
அருகில் இருந்த ப்ளாட்பாரத்தில் வரிசையாக கடைகளும், செருப்பு தைப்போரும் அமர்ந்திருந்தனர், யாராவது காலில் செருப்பு பிய்ந்திருக்கிறதா என்ற பார்வை அங்கு போவோர் வருவோரின் காலையை தேடிக் கொண்டிருந்தது.
நல்லவேளை சிக்னல் விழுந்து விட்டது, அப்பாடா என்று கூறிக்கொண்டே சைக்கிளை அழுத்தினாள் அவள்.
பஸ்நிலையத்தை நெருங்கியதும் அங்கு அமர்ந்து இருந்த ஒருவரிடம் பையிலிருந்த பார்சலை நீட்டினாள். அவனுடைய முகம் எப்போதும் போல் மலர்ந்தது, ஒரு நிமிடம் அந்த முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்தவள் நிரந்தரமான சந்தோஷத்தை உண்டாக்க விரும்பினாள்.
பார்சலை வாங்கியவன் அவளுடைய மிதிவண்டி கடந்ததும் அதிலிருந்த உணவை உண்பதில் முற்பட்டான், அவன் இரு கால்களையும் இழந்தவன்.
அவனை பார்த்தால் அவள் மனதில் ஏனோ ஒரு பரிதாபம் . எனவே தினமும் அவனுக்கு ஒரு வேளை உணவு அவளுடைய பொறுப்பாய் எடுத்துக்கொண்டாள், அதுவும் அவளுடைய உணவை பாதியாக குறைத்து தான்.
அவன் பெயர் கோடிஸ்வரன். ஆனால் பெயர் மிகவும் பொருத்தம் தான் என்று அவன் பெயரை கேட்ட போது எண்ணினாள்.
அவள் பெயர் தீபா. வெளிச்சம் என்ற அர்த்தத்தை எடுத்து கொண்டு யாருக்காவது துன்பம் என்றால், அவளால் முடிந்த உதவி செய்வாள்.
இவள் கஷ்டம் என்று நினைத்து செய்த பல உதவி கள் இறுதியாக நகைச்சுவையாக முடிந்துவிடும்.
ஒரு நாள் கடைக்கு சென்றவள் வழியில் ஒரு பாட்டி வாயை அசைத்து கொண்டே இருப்பதற்காக அருகில் பூந்தொட்டியிலிருந்த மண்ணை வாயில் போட, உடனே வீட்டிற்கு சென்று தாயிடம் கூட சொல்லாமல் பத்து ரூபாய்க்கு இரண்டு பீஸ்கட் பாக்கெட்களை வாங்கி அந்த பாட்டியின் கைகளில் திணித்தாள். அந்த பாட்டிக்கு, கண்ணோ அறை குறை, காதோ முழு குறை, எனவே அமைதியாக வாங்கி கொண்டார்.
பிறகு வீட்டிற்கு திரும்ப, பக்கத்துவீட்டு வாண்டு “YOU ARE GREAT!” என்றது அவளை பார்த்து, உடனே பூரிப்பில் வீட்டிற்கு சென்றாள்.
தன் தாயிடம் “அம்மா வெளியில ஒரு வயசானவங்களை பார்த்தேன் மா, எனக்கு கஷ்டமாக இருந்தது” என்றவள். உடனே தன் மாமாவிடம் தொடர்பு கொண்டு முதியோர் இல்லத்தையே விசாரிக்க சொல்லி விட்டாள்.
பிறகு தான் தெரிந்தது அந்த பாட்டி பொழுது போகாமல் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார் என்று!.
தாயின் குரல் கோபமாக ஒலித்தது ”அடி பாவி சட்டினி அரைக்க வைச்சிருந்த காசை இப்படி பண்ணிட்டு வந்திட்டியே! இன்னிக்கு ரசத்துல சாப்பிட்டு படு அப்பதான் திருந்துவ என்று!”ஓசை படாமால் மாடிக்கு சென்று விட்டாள்.
மற்றொரு சமயம், இரண்டு செங்கல் ரோட்டில் கிடக்க தூக்கி தூரப் போட்டாள் அது உடைந்து சிதறியது.
அப்போது அருகே வந்தவர் “ஏன்மா செங்கல் தூக்க முடியலேனு வைச்சுட்டுப்போன இப்படி உடைச்சிட்டியே எங்கிருந்து வந்து சேர்றிங்க எனக்குன்னு என்று பொறிந்து விட்டு போனார்”. அவளோ சுற்றிலும் பார்வையை ஒட விட்டாள் “அப்பாடா யாரும் பார்க்கலை!” என்றபடி அங்கிருந்து அகன்றாள்.
அன்றுடன் அவளுக்கு கடைசி நாள், இனி அவள் வேலைக்கு செல்ல போவது இல்லை எனவே அவளுக்கு வருத்தமாக இருந்தது.
இனி அந்த கோடிஸ்வரனின் ஒரு வேளை சாப்பாடு என்ற எண்ணம் தான் அவள் மனதில். எனவே அன்று அவரிடம் பேசினால் “நீங்க எதாவது வேலை பார்க்கறிங்களா, நான் வேணா எங்க அண்ணன் கிட்ட சொல்லி எதையாவது செய்றேன்” என்றாள். இந்த ஒரு மாதமாக உணவு கொடுத்த மரியாதைக்காக கோடிஸ்வரன் அவளை திட்டவில்லை.
மெளனமாக மறுத்துவிட்டான். அவளும் இப்பொழுது வெளியூர் சென்றுவிட்டாள். ஆனாலும் கோடிஸ்வரன் வாழ்கிறான், வேறுயாரோருவர் பரிதாபத்துடன் செய்யும் உதவியால்.
எப்பொழுதாவது பஸ்சில் செல்லும் போது மீண்டும் அவனை சந்திக்க நேரும் “பரிதாப பார்வையை செலுத்திய படி பஸ்ஸுடன் அவளும் நகர்ந்து விடுவாள்”
வாழ்க்கை இப்படித்தான் என்று பழக்க படுத்தி கொண்டால் மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கும்.
முயற்சி செய்து பழக்கத்தை மாற்றிவிட்டால் மற்றவர்கள் பரிதாபத்தில் வாழ நேராது.

அவள் முயற்சி செய்தால்…
அவன் வாழ்வதற்கு!
பரிதாபத்துடன் அல்ல….!
பரிதாபம் !!!……
மோசமான வார்த்தை
மற்றொருவர் சொல்லும்போது கேட்க நேருவது !
இப்படியும் மனதில் தோன்றும்
“அவன் என்ன உசத்தி!
யார் அவனுக்கு உரிமை கொடுத்தா
என்னை பார்த்து பரிதாபப்பட!..
ஏனோ இந்த எண்ணம்
அவனுக்கு மட்டும் எதிர்மறையாக அமைந்துவிட்டது!

தன்னலம் மிக்க மாந்தர்கள் நிறைந்த சமுதாயமாக இக்காலம் மாறிவிட்டதே என்கிற கவலை மனதில் பெருகிவரும் சூழலில்.. உங்களைப்போல் இளைஞர்கள்..இளைஞிகள்.. இதுபோல் சமுதாய அக்கறையுடன் நம்மைச்சுற்றி நடக்கும் நடப்புகளில் கவனம் செலுத்துவதும் அதன் வாயிலாக உங்கள் கருத்துக்களை தெள்ளத்தெளிவாக கதை, கவிதைகள் வாயிலாக பதிவுசெய்வதும் போற்றத்தக்கது! வரவேற்கத்தக்கது!
அவ்வண்ணம் தங்களின் “எப்படியும் வாழ்கிறான்” சிறுகதை நெஞ்சம் தொடுகிறது! படிப்படியான பயணத்தில் நீங்கள் வெற்றியின் சிகரம் தொட வாழ்த்துக்கள்! உங்களின் பதிவின் படிமம் சீராக இருக்கிறது! உங்களுக்கென தனித்துவம் காட்டுங்கள்! வெற்றி நிச்சயம்! இளம்வயதிலேயே தொடங்கியிருக்கிற இந்த ஆர்வம் வாழ்க்கை முழுவதும் தொடருட்டும்!
அன்பின் சங்கமத்தில் ஆனந்த அலைகள்பொங்க எந்நாளும் திகழும் மங்கலமாய் வாழ்க்கை இனிக்கட்டும்! இணையாக எழுத்துப்பயணமும் நடந்தேறி இலக்கிய உலகில் உங்களுக்கென ஒரு சிம்மாசனம் உறுதியாகட்டும்!