கோகோ-கோலாவின் புதிய பானம், “மாஸா மில்கி டிலைட்” அறிமுகம்

0

‘இந்தியாவின் மிகப் பெரிய பானங்கள் நிறுவனம் அதன் வழங்கு பட்டியலை மேலும் விரிவுபடுத்துகிறது. உள்ளுர்ச் சுவை விருப்பங்களின் அடிப்படையில் நுகர்வோர்களுக்கு ஈடு இணையற்ற ருசி அனுபத்தையும் மற்றும் புத்தாக்கத்தை வழங்கும் வகையில் மாம்பழம் மற்றும் பாலின் உண்மையான அற்புதக் கலவையை அறிமுகப்படுத்துகிறது‘

*குர்காவோனிலுள்ள கோகோ-கோலா இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தினால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சாறு நிறைந்த மாம்பழங்கள் மற்றும் பாலின் சுவைமிக்க கலவை, மாஸா மில்லி டிலைட் ஆகும்.

*இந்திய வாடிக்கையாளர்களுக்காக இச்சமீபத்திய புத்தாக்கம், பிரத்தியேகமான உருவாக்கப்பட்டுள்ளது. 200 மில்லி டெட்ரா ஸ்லிம் பேக்கில் கிடைக்கும் இதன் விலை கட்டுப்படியாகக் கூடிய அளவில் ரூ.15 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*மாஸா மில்கி டிலைட்டின் புத்தாக்க நுகர்வோர் கருத்தாக்கம் அதன் வர்த்தக வாசகமான “பகிர்வது சாத்தியமல்லை” (ஷேரிங் நாட் பாசிபிள்) என்பதில் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

*படிப்படியான அறிமுகத்தின் ஒரு பகுதியாக, மாஸா மில்லி டிலைட் கொல்கத்தாவிலுள்ள டராடரா பாட்லிங் தொழிலகத்தில் (டயமண்ட் பீவரேஜஸ் பிரைவேட் லிமிடெட்) உற்பத்தி செய்யப்படும் மற்றும் கொல்கத்தாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அவுட்லெட்கள் வழியாக நுகர்வோர்களுக்குக் கிடைக்கப்பெறுமாறு செய்யப்படும் – படிப்படியாக இந்த ஆண்டில் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்படும்.

*பரந்துபட்ட மாதிரிகள் வழங்குதல், சாலைக் காட்சிகள், தொலைக்காட்சி விளம்பரம் போன்ற முன்முயற்சிகள் உள்ளடங்கிய நுகர்வோர் விளம்பரத் திட்டங்கள் வழியாக இந்த அறிமுகத்திற்கு ஆதரவளிக்கப்படும்.

சென்னை, 18 ஆகஸ்ட், 2010:

மாஸாவின் ஈடு இணையற்ற சுவையினால் நுகர்வோர்களை வெற்றிகரமாகத் திருப்திபடுத்தியதைத் தொடர்ந்து, தனது சமீபத்திய புத்தாக்கம் வழியாக கோகோ-கோலா இந்தியா டெய்ரி (பால் சார் பொருட்கள்) பிரிவில் கால்பதிப்பதை 2010 ஆகஸ்ட் 18 அன்று அறிவித்துள்ளது. குர்காவோனிலுள்ள கோகோ-கோலா இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தினால் பிரத்தியேகமான உருவாக்கப்பட்டுள்ள சாறு நிறைந்த மாம்பழங்கள் மற்றும் பாலின் சுவைமிக்க கலவை மாஸா மில்லி டிலைட் ஆகும். உயர் தரம் வாயந்த மாம்பழங்களை பாலுடன் கலந்து தயாரிக்கப்படும்
மாஸா மில்கி டிலைட் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிச்சய புத்துணர்ச்சி அனுபவத்தையும் மற்றும் சுவை அனுபவத்தையும் அளிக்கும். மாஸா மில்கி டிலைட்டின் புத்தாக்க நுகர்வோர் கருத்தாக்கம் அதன் வர்த்தக வாசகமான “பகிர்வது சாத்தியமல்லை” (ஷேரிங் நாட் பாசிபிள்) என்பதில் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

கோகோ-கோலா இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவர் ரிகார்டோ ஃபோர்ட் அவர்கள், “எங்கள் பானங்கள் வழங்கு பட்டியலைத் தொடர்ந்து மதிப்பிடும் மற்றும் விரிவுபடுத்தும் வாய்ப்புகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். கோகோ-கோலாவின் டெய்ரி சந்தை கால்பதிப்பினை மட்டுமல்லாம் நாட்டில் மாஸா பிராண்டின் தலைமைத்துவ நிலையையும் வலுப்படுத்தும் மாஸா மில்கி டிலைட்டின் அறிமுகத்தினை அறிவிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகும். குர்காவோனிலுள்ள கோகோ-கோலா இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தினால் இச்சமீபத்திய புத்தாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

படிப்படியான அறிமுகத்தின் ஒரு பகுதியாக, மாஸா மில்லி டிலைட், கொல்கத்தாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அவுட்லெட்டுகள் வழியாக நுகர்வோர்களுக்குக் கிடைக்கப்பெறுமாறு செய்யப்படும் – படிப்படியாக இந்த ஆண்டில் தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்படும்” என்று கூறினார்.

200 மில்லி ஸ்லிம் டெட்ரா பேக்கில் கிடைக்கும் மாஸா மில்கி டிலைட்டின் விலை, கட்டுப்படியாகக் கூடிய அளவில் ரூ.15 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோகோ-கோலா இந்தியாவின் இச்சமீபத்திய புத்தாக்கம் சுவையான மற்றும் புத்துணர்ச்சியளிக்கும் பாலின் சுவை கொண்ட மாம்பழ பானத்தை விரும்பும் இளைய சமுதாயத்தினரையும் மற்றும் இளம் நடுத்தர வயதுடையவர்களையும் கூர்நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோகோ-கோலா இந்தியாவின், ஃபிரான்சைஸி பாட்லிங் ஆபரேஷன்ஸ் பிரிவின் துணைத்தலைவர் விகாஸ் சாவ்லா அவர்கள், “புத்தாக்கத்தினைச் செயல்பாடாகக் கொண்டுள்ள கோகோ-கோலா இந்தியாவிலுள்ள நாங்கள், எங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புதிய வழிமுறைகளைக் கண்டறியத் தொடர்ந்து முயன்று வருகிறோம். இம்முயற்சியின் வெளிப்பாடே மாஸா மில்கி டிலைட்டின் அறிமுகம் ஆகும். சுவை மிக்க மாம்பழங்கள் மற்றும் பாலின் அற்புதமான கலவை கொண்ட இந்திய சுவை மாஸா மில்கி டிலைட் ஆகும். அடுத்த இரண்டு மாதங்களில், கொல்கத்தாவிலுள்ள 3,000 அவுட்லெட்களில் மாஸா மில்கி டிலைட் விற்பனை செய்யப்படும். வாடிக்கையாளர்கள் இச்சமீபத்திய புத்தாக்கத்தினை உண்மையிலேயே புத்துணர்ச்சி மிக்கதாகவும் மற்றும் சுவை மிக்கதாகவும் கருதுவார்கள் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

மாஸா மில்கி டிலைட் புத்தாக்கம் குறித்து

குர்காவோனிலுள்ள கோகோ-கோலா இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகத்தினால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சாறு நிறைந்த மாம்பழங்கள் மற்றும் பாலின் சுவைமிக்க கலவை மாஸா மில்லி டிலைட் ஆகும். அறிமுகத்திற்கு முன்னதாக மாஸா டிலைட் இந்திய சுவை விருப்பங்களுக்கு பொருந்துவதை உறுதிப்படுத்த நீடித்த நுகர்வோர் ஆராய்ச்சி மற்றும் நிலைப்புத் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்திய வெப்பச் சூழலை தாங்கும் வகையிலும் மற்றும் 4 மாதங்கள் ஷெல்ஃப் லைஃப் அளிக்கும் வகையிலும் இத்தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநியோகச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், கோகோ-கோலா இந்தியா நிறுவனம், மாஜா மில்கி டிலைட் உற்பத்திக்குத் தேவையான மாம்பழம் (தோட்டபூரி மற்றும் அல்ஃபோன்ஸா வகையினங்கள்) மற்றும் பாலை நமது நாட்டின் விநியோகஸ்தர்களிமிருந்தே பெறுகிறது.

இப்புத்தாக்கத்தினைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, உற்பத்தித் தொழிலகத்திலிருந்த விநியோக அமைப்பு கடந்து விற்பனையாளர் வரை செல்லும் ஒரு சிறப்பு “கூல் செயின்”ஐ உருவாக்கியுள்ளது. கூடுதலாக விற்பனைக் குழு மற்றும் விற்பனையாளர்களுக்குத் தயாரிப்பு கையாளுதல் குறித்த சிறப்புப் பயிற்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, மாஸா மில்கி டிலைட்டை 30 டிகிரி செல்ஷியஸ்ஸிற்கு மேற்பட்ட வெப்ப நிலையில் வைக்கக்கூடாது என்பதாகும்.

நுகர்வோருடன் இணைதல்

கொல்கத்தாவிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அவுட்லெட்்டுகள் மற்றும் சேனல்கள் வழியாக மாஸா மில்கி டிலைட் – ஐ சந்தையாக்கல் செய்ய கோகோ-கோலா இந்தியா நிறுவனம் செயல்திறன் வாய்ந்த விளம்பரத் திட்டங்களை உருவாக்கியுள்ளது. நீடித்த மாதிரிகள் வழங்குதல், மக்கள் கூடும் இடங்களில் இருத்தல் போன்றவை உட்பட்ட சாலைக் காட்சிகள் மற்றும் 360 டிகிரி சந்தையாக்கல் தொடர்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கள முன்முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் வகையில் மாஸா மில்கி டிலைட்டின் கருத்தாக்கமான “பகிர்வது சாத்தியமல்லை” (ஷேரிங் நாட் பாசிபிள்) என்பது கொல்கத்தாவிலுள்ள அனைத்து முன்னணி தொலைக்காட்சி சேனல்களிலும் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த விளம்பரச் செயல்திட்டம் முழும் லியோ பர்னட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

கோகோ-கோலா இந்தியா குறித்து

ஸ்பிரைட், தம்ஸ்-அப், கோகோ-கோலா, டயட் கோக், ஃபேண்டா, லிம்கா, மாஜா, மினிட் மேட், மினிட் மேட் நிம்பு ஃபிரெஷ், பர்ன், ஜியார்ஜியா, ஜியார்ஜியா கோல்டு, கின்லே மற்றும் கின்லே கிளப் சோடா ஆகிய பிராண்டுகளைக் கொண்டு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட அவுட்லெட்டுகள் வழியாக, மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்குப் புத்துணர்ச்சியை வழங்குகிறது.

இந்தியாவின் முன்னணி சர்வதேச முதலீட்டாளராக விளங்கும் வகையில் இந்நிறுவனம் 1 பில்லியன் யு.எஸ். டாலர்களுக்கும் மேற்பட்ட தொகையினை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. கூடுதலாக, இந்நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகளில் 6,000-ற்கும் மேற்பட்ட இந்திய மக்கள் பணியாளர்களாக உள்ளனர். நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் மற்றும் அதன் தயாரிப்புகள் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, தயவு செய்து பார்க்கவும் http://www.coca-colaindia.com/ மற்றும் http://www.myenjoyzone.com/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.