சென்னையில் வருமானவரித் துறையின் 150வது ஆண்டு நிறைவு விழா – செய்திகள்
இந்தியாவில் வருமானவரித் துறை செயல்பட ஆரம்பித்து 150 ஆண்டுகள் முழுமை அடைந்ததையொட்டி, 24 ஜுலை 2011 அன்று சென்னையில், சிவகாமி பெத்தாச்சி கலையரங்கத்தில், வருமானவரித் துறை அலுவலகத்தால் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் மேதகு தமிழ ஆளுனர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வருமானவரித் துறையின் சென்னைக் முதல் கோட்டத் தலைமை ஆணையர் திருமதி. பிரேமா மாலினி வாசன், I.R.S., அவர்கள், தலைமை விருந்தினரையும் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
வரவேற்புரைக்குப் பின் வருமானவரித் துறையின் 150 ஆண்டு கால வரலாற்றை விளக்கிடும் விதமாக ஒரு குறும்படம் திரையிடப்பட்டது.
மேதகு தமிழ ஆளுனர் திரு. சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். அதன் பிறகு அவர் அதிக வரி செலுத்தியோரை கவுரவித்தார்.
அதிக வரி செலுத்தியோர் :
தனி நபர் பிரிவு : திரு. லட்சுமி நாராயணன், துணைத் தலைவர், காக்னிசண்ட் டெக்னாலஜிஸ்
பொதுத்துறை பிரிவு : சேலம் நகர கூட்டுறவு வங்கி, சேலம்.
தனியார் துறை பிரிவு : ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் ஃபினான்ஸ் கம்பனி
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தின் மருத்துவர். சாந்தா, நடிகர் கமல ஹாசன், எழுத்தாளர் சிவசங்கரி, பரதநாட்டியக் கலைஞர் திருமதி. பத்மா சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களை வருமானவரித் துறையின் மூத்த தமிழக ஆணையர்கள் கவுரவித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவின் நிறைவாக சென்னை இரண்டாம் கோட்ட வருமானவரித் தலைமை ஆணையர் திரு. ஜி.சி. ஜெயின் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பொதுத்துறை பிரிவு : சேலம் நகர கூட்டுறவு வங்கி, சேலம்.:
~நற்செய்தி. கூட்டுறவு ஓங்குக.