கவிஞர் காவிரிமைந்தன்.

 

தேனுண்ணும் வண்டு..

Then unnum vanduஅமரதீபம் திரைப்படத்திற்காக டி. சலபதிராவ் மற்றும் ஜி.இராமநாதன் இசையில் ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல். பாடலை இயற்றியிருக்கிறார் கவிஞர் மாயவநாதன், 1956ல் வெளிவந்த இப்படத்தின் பாடல் இன்றும் மக்கள் மனதில் வசந்தகீதமாய் வலம்வருகிறது!

கேட்டாலே கிறங்க வைக்கும் இனிய இசையில், பாடும் குயில்களாக ஏ.எம்.ராஜா., பி.சுசீலா தமிழமுதம் பொழிய, இயற்கையின் எழில்தனை வார்த்தைகளாக்கி வரைந்துவைத்த கவிதையிது!

காதலின் இன்பம் என்று எதை நாம் சொல்ல முடியும்? கவிதையும் இசையும் இப்படி கைகோர்த்து வருகிற காட்சி தவிர, கண்கள் காணும் காட்சி இதுவே காதலுக்கு சாட்சியாக, எழில்மேலும் கவிவண்ணம் இசையோடு சேர்ந்து இங்கு என்னென்ன சொல்கிறது கேளுங்கள்!!

மனதின் மூலை முடுக்கெல்லாம் இந்தப் பாடலின் ரீங்காரம் ஓங்காரமிட நல்ல தமிழ்ப் பாடல் வரிகளிவை என்று நாளைய சமுதாயமும் அடையாளம் காண மாயவநாதன் எழுதிவைத்த பாட்டு!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நடிகையர் திலகம் சாவித்திரியும் இணைந்து வழங்கிய பாட்டு!!! இதய அரங்கில் இனிமை தவழ என்றைக்கும் கேட்கலாம்… எத்தனை முறை வேண்டுமானாலும்!!!

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
பூங்கொடியே நீ சொல்லுவாய்

வீணை இன்பநாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில் தான் என்னவோ ஓஓஓஓ
புதுமை இதில் தான் என்னவோ?

மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏனலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய் ஓஓஓஓ
மென் காற்றே நீ சொல்லுவாய்

கானமயில் நின்று வான்முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே..
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததுமேன் வாழ்விலே ஓஓஓஓ
காணாததுமேன் வாழ்விலே

கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ?
கலைமதியே நீ சொல்லுவாய் ஒஓஓஓ
கலைமதியே நீ சொல்லுவாய்
ஓஓஓ ஓஓஓ

காணொளி: https://youtu.be/AhGgNSX545E

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தேனுண்ணும் வண்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *