பி‌ரகா‌ஷ்‌ரா‌ஜ்‌ – போ‌னி‌ வர்‌மா‌ தி‌ருமணம்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் – போனி வர்மா திருமணம், 2010 ஆகஸ்டு 24 அன்று மும்பையில் நடந்தது.

தமிழின் முக்கிய குணச்சித்திர நடிகரான பிரகாஷ்ராஜ், பல்வேறு பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். கதாநாயகனாகவும் நடித்துள்ளார். காஞ்சீவரம் படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டூயட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி, நல்ல படங்களைத் தயாரித்து வருகிறார்.

அண்மையில் பிரகாஷ்ராஜூம் அவரின் முதல் மனைவி லலிதாகுமாரியும் விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். பின்னர் இந்தித் திரையுலக நடன இயக்குநர் போனி வர்மாவுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்றனர். அண்மையில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான இனிது இனிது படத்தின் நடன இயக்குநர், போனி வர்மாதான். இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன் பிரகாஷ் ராஜ் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, பிரகாஷ்ராஜூக்கும் போனி வர்மாவுக்கும் மும்பையில் 2010 ஆகஸ்டு 24 அன்று  காலை 10.30 மணிக்குத் திடீர் திருமணம் நடந்தது. இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் திருமணத்தில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.