கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

crazy
ஹரிச்சுவடி

அந்தரி அண்ணா கோவிந்தா
ஆவுடை அப்பா கோவிந்தா
இந்திர லோகம் கோவிந்தா
ஈ கொசு எனக்கு கோவிந்தா
உந்தன் மலையில் கோவிந்தா
ஊர்வேன் புழுவாய் கோவிந்தா
எந்த நாளுமே கோவிந்தா
ஏகாந்த சேவை கோவிந்தா
ஐந்து பொறிகட்கு கோவிந்தா
ஐயமிட்டிடு கோவிந்தா
ஒன்றி உரைப்போம் கோவிந்தா
ஓம் நம நாரண கோவிந்தா

 

Share

Comments

One response to “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்”

  1. மீ.விசுவநாதன்

    ரொம்பவும்  எளிமையானது. உள்ளே உயர்வானது. அழகான கவிதை. குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டிய கவிதை. மனதில் எளிதில் பதியும். அ முதல் ஓ வரை பாடமும் ஆகும். பாராட்டுக்கள்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *