-மீ.விசுவநாதன்

இலக்கணப் புலியாய் இருக்கின்றேன் – ஆனால்
–இலக்கணப் பிழையுடன் வாழ்கின்றேன்!
இலக்கினைத் தெரிந்து நடப்பதற்கு – சொல்லும்
–எவரையும் மதித்திட மறுக்கின்றேன்!

தனக்கெனக் கொள்கை இல்லாமல் – தினம்
–தட்டியும் தடவியும் செல்கின்றேன்!
மனக்கணக் கொன்று வைத்திருந்தேன் – அதை
–மறதியின் மடிதனில் தூங்கவைத்தேன்!

முயற்சியை என்றும் தொலைக்காமல் – நான்
–முழுமுத லறியவே முனைகின்றேன்!
பயிற்சியை மேலே தொடர்வதற்கு – குரு
–பளிச்செனத் தெரிந்திடத் தவிக்கின்றேன்!

ஒவ்வொரு உயிரும் ஒளிதேடி – தினம்
–நீண்டதோர் பயணமே செய்கிறது!
எவ்வித மேனும் பழியின்றி – தன்
–இருப்பினை வைத்திடத் தவிக்கிறது!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஒளிதேடி ஒரு பயணம்!

  1. ஒவ்வொரு உயிரும் ஒளிதேடி – தினம்
    –நீண்டதோர் பயணமே செய்கிறது!

    அருமையான கவிதை………ஒரு ஆன்மாவின் பயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *