இலக்கியம்கவிதைகள்

சிவபிரதோஷம்

மீ.விசுவநாதன்

 நகமொன்றின் உள்ளிருக்கும் நச்சழுக்காய் என்னுள்
அகமென்னும் ஆணவப்பே(ய்) ஆடுவதை  நீயேன்shiva
சுகமாக ரசிக்கின்றாய்! சுவராய்நிற் கின்றாய்!
யுகமாக நீக்காமல் சோதிக்கும் சிவனே!

மங்கைதனை ஒருபாதி மார்போடு பதித்தாய்!
கங்கைதனை பூமிக்காய் கடகடெனப் பிழிந்தாய்!
தொங்கியுள சடைகூட்டி யோகியென ஒளிர்ந்தாய்!
தங்கிடவே அழைக்கின்றேன் தப்பலாமோ சிவனே!

(கலி விருத்தம் – வாய்பாடு:  காய், காய், காய், மா)

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  கவிஞரின் தாக்கம், ஏக்கம் மற்றும் உரிமை மூன்றும் வெளிப்படுகின்றது..
  பாராட்டுக்கள்.
  க. பாலசுப்ரமணியன் 

 2. Avatar

  அழகான பாடல். யுகமாக நீக்காமல்.. என்ற இடம்தான் புரியவில்லை. சொல்க.
  கடகடெனப் பிழிந்தாய்..நயமான சொற்பதம். வாழ்க,
  யோகியார்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க