மயிலை கற்பகாம்பிகை – நவராத்திரி நாயகியர் (1)
க. பாலசுப்பிரமணியன்
கற்பகாம்பிகை – மயிலை
கற்பகமே ! அற்புதமே !!
கருணையின் தத்துவமே !!
கயிலையின் கனியமுதே !
மயிலையின் முத்தமிழே !!
கற்சிலையும் காந்த நிலை
கண்களிலோ அன்பின் விதை
கைகளிலே கருணை மழை
காலமெல்லாம் உந்தன் கதை !
மயிலாக நீ வந்தாய்
ஒயிலாக நீ நின்றாய்
மலராலே நீ துதித்தாய்
மகேசனை நீ அணைத்தாய் !
மாதவம் செய்தோரும்
மாமுனி குலத்தோரும்
மனங்கனிந்து அழைத்தோரும்
மாதங்கி! உன்னைப் பணிவார்!
நாதங்கள் வடிவாகி
நமச்சிவாயம் ஒன்றாகி
நானிலம் ஆட்சிசெய்யும்
நவராத்திரி நாயகியே!
நல்லோர்கள் காத்திடவே
வல்லோர்கள் வாழ்ந்திடவே
இல்லாமை நீங்கிடவே
இசையாக இன்றே வருவாய்!
படத்திற்கு நன்றி: http://nellaichokkar.blogspot.in/2012/06/blog-post.html