’ஒரு நாள் நில்லு! TVஐ அள்ளு!’ – ரிலையன்ஸ் பரிசுத் திட்டம் – செய்திகள்
ரிலையன்ஸ் நிறுவனம் புதிதாக எலக்ட்ரானிக் பொருள் விற்பனை நிலையங்களை நாடு முழுக்க நிறுவி வருகிறது. சென்னையிலும் இந்த கிளையைத் திறந்துள்ளது. அனைத்து முன்னணி நிறுவனங்களின் டிவி, ப்ரிட்ஜ், ஏசி உள்ளிட்ட அத்தனை எலெக்ட்ரானிக் தயாரிப்புகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் இந்த கடையை அமைத்துள்ளது ரிலையன்ஸ். இக்கிளையின் விளம்பரத்திற்காக ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இருபத்தி நான்கு மணிநேரம் அசையாமல் ஒரே இடத்தில் காலைக் கூட மாற்றாமல் அப்படியே நிற்க வேண்டும். இப்படி நிற்பவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் தொலைக்காட்சி!
07 ஆகஸ்ட் 2011 அன்று சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள இந்த ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோரூமை முன்னணி நடிகை சினேகா தொடங்கி வைத்து இந்த திட்டத்தை முறைப்படி அறிவித்தார்.
“நிக்கறோம்! TV அள்ளுறோம்!” என்று ரிலையன்ஸ் முன் ஆர்வத்துடன் வந்துள்ளனர் பலர்!