கவிஞர் மு.முருகேஷ் உடன் நேர்காணல்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷின் நேர்காணல் கலைஞர் தொலைக்காட்சியில் ஆகஸ்ட்-08 திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
யுரேகா கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும், வந்தவாசி நூலக வாசகர் வட்டத் தலைவராகவும் உள்ள கவிஞர் மு.முருகேஷ் இதுவரை 17 நூல்களை எழுதியுள்ளார். இவரது கவிதைகள் இந்தி, மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது இலக்கிய செயல்பாடுகள் குறித்தும், கல்விப் பணிகள் குறித்தும் எழுத்தாளர் ரமேஷ்பிரபா செய்யும் நேர்காணல் நிகழ்ச்சி 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது.