-பா வானதி வேதா. இலங்காதிலகம்

பச்சை வண்ணம் கண்களிற்கு உச்சமாய் அகம் குளிர்வித்துப்
பருவம் தந்த இலைகளிற்குப் பக்குவமான பங்கீடு முதுமை
பருவத்தோடு அசைந்து ஆடிப் புருவமாய் மலர் அருகிலது
பருவ காலம் மாறிடக் கருகுதலான காம்பு கழன்றது.
நிழல் குடையான இலையென்று நிலப் பாவாடையான நிலையின்று
சருகு சரசரக்கவில்லை பழுத்து முருகு நிலம் போர்த்தியது
ஆல் வேலிங்கு இல்லை வீல் என்று அலறவில்லை
கால்கள் புதையும் அளவு கீழ் விழுந்தது முடிவு.
இலையுதிர் காலம் விரித்தது இறகு; நீளாது பனி
இறகுகளை மூடிடும்; எருவாகி இசைவாகிப் பூமியோடு மண்ணாகும்
நான்கு விதப் பருவங்களை நாம் ரசித்து வாழ்கிறோம்
நன்கொடையாம் இயற்கையின் அற்புத
நயப்பாடான பரிசை அனுபவிப்போம்.

Leave a Reply