மீ.விசுவநாதன்

karthigai

அண்ணா மலையின் தீபம் – மன
அகந்தை பொசுக்கும் நண்பா !
எண்ணா திருக்கும் பேர்க்கும் – ஒளி
இதயம் பாயும் நண்பா !

கிரியை வலமாய் வந்தால் – நம்
கிரகம் உதவும் நண்பா !
அரியும் சிவனும் ஒன்றே – எனும்
அருணா சலமே நண்பா !

தீபத் திருநா ளன்றும் – சிவன்
தெரிவான் நமக்குள் நண்பா !
தாபத் தோடு தொட்டால் – அவன்
தாளே சொர்க்கம் நண்பா !

கலியில் அருணை மலைதான் – நம்
கவலை அழிக்கும் நண்பா !
வலியில் கருணை மழையாய் – நல்
வரமாய்ப் பொழியும் நண்பா !
(வலியில் – வலியில்லாத)

(இன்று – 25.11.2015- திருக்கார்த்திகை தீபத்திருநாள்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on ““திருஅருணாசல சிவம்”

  1. திருவருள் சிவசக்தி படத்தைக் கண்டவுடன் மெய்சிலிர்த்தது. சிவனருள் சகல உயினங்களுக்கும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அற்புதமான பாடல் வரிகளுக்கு நன்றி வணக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.