பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத் ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
புத்தாண் டிக்கணம் பழம் இச்சை புதுப்பிக்கும் சிந்திக்கும் ஆத்மா தனிமை நாடி ஒதுங்கிடும் மோசஸின் வெண்கரம் விலக்கிடும் கிளை மரம் ஏசு மகான் தரணி மேல் பெரு மூச்சு விடுவார்
4. Now the New Year reviving old Desires,
The thoughtful Soul to Solitude retires,
Where the WHITE HAND OF MOSES on the Bough
Puts out, and Jesus from the Ground suspires.
ஈராம் பறவை போனது மெய்யே தன் பூக்க ளோடு ஏழு வளையக் கும்பா போன தெங்கே என்று அறியார், ஆயினும் உள்ளது திராட்சை; பூர்வ ரூபி பயன்தரும், இன்னும் ஓர் பூங்கா நதிக் கருகில் புயல் வீசும்.
5. Iram indeed is gone with all its Rose,
And Jamshyd’s Sev’n-ring’d Cup where no one knows;
But still the Vine her ancient Ruby yields,
And still a Garden by the Water blows.
தாவிதின் வாயிதழ்கள் மூடி இருக்க தெய்வீகமாய் ஊது குழல் உரக்கக் குரல் , “ஒயின், ஒயின், ஒயினென ! கூவிடும் குயில் பூவினைக் கேட்பது, “செந்நிற ஒயின்.” கன்னியின் மஞ்சள் கன்னம் பொன்னிற மினுக்கம்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.
இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].
உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 அழகுற தமிழ் நடையில் மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு, சி ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி வணக்கம். உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 ஐ , மறுபகிர்வு செய்யவும். வல்லமை மின் இதழ் ஆசிரியருக்கு வேண்டி, விரும்பி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -2 அழகுற தமிழ் நடையில் மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு, சி ஜெயபாரதன் அவர்களுக்கு நன்றி வணக்கம். உமர் கயாம் ஈரடிப் பாக்கள் -1 ஐ , மறுபகிர்வு செய்யவும். வல்லமை மின் இதழ் ஆசிரியருக்கு வேண்டி, விரும்பி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
https://www.vallamai.com/?tag=உமர்-கயாம்-ஈரடிப்-பாக்கள
என்ற சுட்டி வழியாகவோ … அல்லது பதிவின் கீழே கொடுக்கப்படும் குறிச்சொல் சுட்டியையோ (Tags)
Tags: உமர் கயாம் ஈரடிப் பாக்கள், சி. ஜெயபாரதன்
சொடுக்கி “உமர் கயாம் ஈரடிப் பாக்கள்” பதிவுகளைப் படிக்கலாம்