க. பாலசுப்பிரமணியன்

கற்றல் வேறு ; கற்பித்தல் வேறு !

education

 

கற்பிக்கப் படுவதெல்லாம் முழுதாகவோ அல்லது சிறிதளவிலோ கற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.  கற்றல் ஒரு தனி மனிதனின் தேவைகள்,  சூழ்நிலைகள்  சமூகப்  பொருளாதார நிலைகள் மற்றும் இயற்கையின் தாக்கங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றது. எனவே எந்த இரண்டு மாணவர்களும் ஒரே மாதிரியாகக் கற்றுகொள்வர் என்று எதிர்பார்த்தல் தவறு. மூளை விஞ்ஞான வல்லுனர்களும் இதே கருத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர். கற்றல் மூளையின் ஒரு தனிப்பட்ட பயணம். ஒரு முறை சர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார் “நான் கற்றுக்கொள்ளத் தயாராக  இருக்கின்றேன். ஆனால் கற்பிக்கப்படுவதை வெறுக்கின்றேன்.” ( I am willing to learn, but I refuse to be taught)

இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணமே அரவிந்தர் கல்வியைப் பற்றி தன்னுடைய கருத்துக்களை கீழ்கண்ட மூன்று விதிகளாக விளக்கினார்.

  1. கற்பித்தலைப் பற்றிய முதல் விதி நம்மால் எதையும் கற்பிக்க முடியாது என்பது தான். (The first principle of teaching is nothing can be taught)
  2. மூளை தன் வளர்ச்சிக்குத் தன்னையே சார்ந்திருக்கின்றது. (The second principle of teaching is that mind has to be consultated for its own growth)
  3. கற்றல் எப்பொழுதுமே அருகிலிருந்து வெளிநோக்கிச் செல்கின்றது.( Learning always happens from near to far)

கற்றல் மூளையின் ஒரு வினோதமான செயல்!

அது நிகழ்வதற்கு ஆயிரக்கணக்கான உள்நிகழ்வுகளை மூளை நடத்துகின்றது. அது எவ்வாறு நடக்கின்றது என்று அறிந்தால் நாம் வியப்பில் ஆழ்வோம்.! ஆகவே கற்றலின் உள்நோக்கம் ஒரு குழந்தையின் தனித் தன்மையை அறிந்து பாதுகாத்து வளர்ப்பதுதான்!

இந்தக் கருத்தை வலியுறத்தியே சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார் ” ஒரு தனி  மனிதனின் உள்ளுறையும் முழுமையை வெளிப்படுத்துவதுதான் கல்வியின் நோக்கம். ” ( Education is the manifestation of the perfection already in man)

மாற்றாக, தற்காலத்தில் நாம் குழந்தைகளை உயர் கல்விகளுக்கான தயாரிப்பில் முதல் வகுப்பிலிருந்தே ஈடுபடுத்திவிடுகின்றோம் ! இதனால் குழந்தையின் கற்றலிலும் வளர்ச்சியிலும் தேவையல்லாத மாற்றங்களும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களும் குழந்தைகளை பாதிக்கின்றன. ளை ன வல்லுனர்கள் இளம் சிரார்களிடும் ஏற்படும் மன அழுத்தங்களுக்கான தாக்கங்களை  நான்கு வகையாகப் பிரித்துப் பார்கின்றனர்.

புத்தகப் பைகளால் ஏற்படும் தாக்கம்

  1. கல்வித்திட்டத்தால் ஏற்படும் தாக்கம்
  2. பாடங்கள் சொல்லிக்கொடுக்கும் முறைகளால் ஏற்படும் தாக்கம்,
  3. மன உளைச்சல்களால் ஏற்படும் தாக்கம்.

இந்த நான்கில் நான்காவது காரணத்தால் ஏற்படும் தாக்கம்,  மிக வலுவானதாகவும், வேதனைக்குரியதாகவும், வளர்ச்சியை பாதிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.

ஆகவே கல்வியை ஒரு விளையாட்டு முறையில் பயிலும் பொழுது அது  ஏற்புடையதாகவும் இனியதாகவும் நினைவில் நிற்ககக் கூடியதாகவும் அமைகின்றது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *