-மலர் சபா

மதுரைக் காண்டம் – 09: ஊர்சூழ் வரி

மதுரை மக்கள் கண்ணகியின் நிலைக்கு இரங்கிக் கூறுதல்

நீங்காத துன்பத்தை இப்பெண்ணுக்கு உண்டாக்கியதால்
நம் அரசனின் வளையாத செங்கோல் வளைந்துவிட்டது;
இதற்குக் காரணம் என்னவோ!
மன்னவர்க்கெல்லாம் மன்னன்
திங்களை ஒத்த குடையும்
வாளினையும் உடைய வேந்தன்
தென்னவன் பாண்டியன் கொற்றம் சிதைந்தது;
இது எதனால் நிகழ்ந்ததோ!
உயிர்களைக் குளிர்விப்பவன்
வீரம் வாய்ந்த வேலினை உடையவனின்  kannagi 2
குளிர்ந்த வெண்கொற்றக்குடை
வெம்மை பரப்புகிறதே;
இது எதனால் நிகழ்ந்ததோ!

செம்மையான பொன்னால் ஆகிய சிலம்பைத்
தன் கையில் ஏந்தி
நமக்குத் தீமை விளைவிக்கும் பொருட்டு வந்துள்ளது;
இது எதனால் நிகழ்ந்ததோ!
அழகிய செவ்வரி ஓடிய மைதீட்டப்பட்ட
கண்களையுடைய இந்தப்பெண்
ஏங்கி அழுவதையும் அரற்றுவதையும் பார்த்தால்
தெய்வம் வந்து தன் மீது ஏறியது போலக் காணப்படுகிறாள்;
இதனால் என்ன விளையப்போகிறதோ!

இங்ஙனம் தமக்குத் தோன்றியதையெல்லாம் கூறி
மதுரை நகர் மக்கள் வருந்தினர்;
அரசனின் மீது உண்டான பழியை,
குடிமக்கள் துணிந்து குற்றம் கூறும்
நிலைமை கொண்டதாயிற்று
அந்த நாளில் அந்த மதுரை மாநகர்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *