மனுமுறை கண்ட வாசகம் …. நற்சிந்தனை ……2
மஞ்சுளா வள்ளலார்
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ ….
இந்தியா சிந்தனை மரபில் முக்கியமான ஞானியாகக் கருதப்படுபவர் வள்ளலார் அவரிடம் பிரதானமாக இருந்த குணம் கருணை ,அதுவே அனைத்து குணங்களில் அடக்கம் எனலாம் . எங்கோ ,யாரோ அடிபடுகிறபோது அவர்களுக்காக நாம் கண் சிந்துவது கருணை.மனிதனிடம் இருக்கும் குணமே அவனை தீர்மானிக்கிறது. நம்மைக் காயப்படுத்தும் எதையும் மற்றவர்களுக்கு செய்யக்கூடாது என்று மகாபாரதத்தில் அனுசாசன பாவத்தில் காணலாம் நமக்குத் தீமையானதை ஒரு போதும் அடுத்தவர்களுக்கும் ஆற்றக்கூடாது என்று பத்மாபுரணமும் குறிக்கின்றது .
இந்த உலகத்தில் மனிதனின் உண்மையான குணம் யாரும் இல்லாத இடத்திலும் தவறு செய்யாது இருத்தல் ஆகும். நம்மை யாரும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் வரும்போது நமது உள்ளுணர்வு விழிப்படைந்து உள் தூங்கும் மிருகம் விழித்து, இது தான் ‘தகுந்த சமயம் ‘என்று கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் .அப்படி தவறு செய்தவர்கள் பெயர்களை பட்டியல் இடும்போது நினைவில் வருவார்கள் ஏராளமான நபர்கள் முதலில் ஏசுநாதர் காட்டிக்கொடுத்த அவரது சீடன். ,கட்டபொம்மனையும் தூக்கிலிடச் செய்த எட்டப்பன் பெரியபுராணத்தில் வரும் முத்துதத்தன் ,என பலரது வரலாறுகள் நமக்கு நம்பிக்கை துரோகத்தால் விளைவாக தோன்றிய கதைகளை இன்றும் கூறும் .
எனவே தான் வள்ளலார் இரண்டாவது மிக முக்கியமான ஒன்று மனிதரின் குணம் என்று மனுமுறை வாசகத்தில் கூறினார் . இதில் மனுநீதி சோழனின் மகன் பசுவின் கன்றை தோர் காலில் கொன்ற நிகழ்வை வைத்து , சமதர்மநீதியை உலகிற்கு உணர்த்தியவர் ஒருவர் நம்பி நம்முடன் வரும்போது அவரே கைக்கழுவிவிடுவது எவ்வளவு பெரிய பாவம் அந்த பாவத்துக்கு பிரதிபலனாக நாம் புண்ணியம் எவ்வளவு செய்தாலும் அது பயன் இல்லை வாழ்வில் மிக பெரிய பாவத்தில் ஒன்று நம்பிக்கை கொண்டவர்களுக்கு துரோகம் செய்வது
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின் ….. என்று புறம்
கூறுகிறது. மேலும் ஔவையின் ஆத்திச்சூடியில்
குணமது கைவிடேல். என்கிறாள் நல்ல குணமே மற்றவர்களையும் அரவணைத்துச் செல்லும் .
நல்ல குணம் உடைய சான்றோர்களைச் சார்ந்த நட்புக் கொள்ள வேண்டும்.
தொடருவோம்