பா.மஞ்சுளா

திருமந்திரம்

திருமூலர்

திருமூலரின் திருமந்திரம் பன்னிருதிருமுறையில் பத்தாம் திருமுறை தமிழர்களுக்கு முத்தான பொது மறை இது ஒன்பது தந்திரங்களையும் 3047,பாடல்களையும் கொண்டது . வருடத்துக்கு ஒரு பாடல் வீதம் மூவாயிரம் பாடல்களைப் பாடினார். இவரது பாடல்களை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் கோயில் கொடிமரத்தின் கீழே கண்டெடுக்கப்பட்டதாக கூறுவர்.சித்தர் மரபில் வந்த திருமூலர் உடம்பைக் கோயில் என்று பாடிய முதல் கவிஞர்,

” என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே”

என்று தன் படைப்பின் நோக்கத்தை உலகத்துக்கு உணர்த்தினார் இவரது பாடல்கள் எளிமையாக படிக்க சுவை தரும்

‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன்’
அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே

என்ற திருமூலரின் மந்திர மணிவாக்கு உலகம் ஒன்றாக வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் வெளிப்பாடு. இவரது மந்திரங்கள் நெடுங்கிலும் , மூச்சுப்பயிற்சி இறையருள் சிவசிந்தனை போலியான வழிபாடு கூடாது போன்ற கருத்துகளை முன்னிலைப்படுத்தி இருக்கின்றன. இதில் முதல் பாடலாக இறைவணக்கத்தில்,

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்அருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ்உம்பம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து என்றே”

இறைவன் ஒருவரே அந்த ஒருவனை இப்போரண்டத்தின் சிவனும் சக்தியாக இரண்டாகவும் உள்ளான்.அந்த இருவனே இவ்வுலகத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில் புரியும், பிரமன் திருமால் உருத்திரன் என்ற மூன்றாகவும் உள்ளான். மேலும் அவனே நான்மறை வடிவில் உள்ளவன்,படைத்தல்.காத்தல் அழித்தல் அருளல் மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அவனே தலைவன்.ஆறு சமயமான ,சைவம்,வைணவம் , சாக்தம் , காணாபத்யம், சௌரம், கௌமாரம் போன்ற சமயத்தின் பிரிவாக இருப்பவனும் அவனே. ஏழ் உலகத்தையும் இயக்குபவனும் எங்கும் நீக்கமற நிறைந்து,பரம்பொருளாகவும் எண்குணங்களையும் உடையவன். அவனது எட்டுவகையான குணங்கள், தன்வயமாதல், தூய உடலை பெறுதல் இயற்கை உணர்வடைதல் , முற்றும் உணர்தல் பற்றற்று ,பேரருள் நோக்கு, முடிவில்லாமை, எல்லையில்லாமை போன்ற எட்டு குணத்துக்கும் அதிபதியாக நிலைத்த பரம்பொருள் என்றுவிளக்கம் கூறுகிறார். இதனை வள்ளலாரும் ,

பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே…. அவனே ஜோதி சொரூபம் கருணை வடிவம் என்கிறார்

இறைவன் என்பவன் பிரபஞ்ச ஆற்றல் அவனே அனைத்தையும் இயக்கும் பேராற்றல் என்று முதல் பாடலில் நமது இறையின் நெறிமுறையை வெளிப்படுத்துகிறார்

முதல் பாடலே முத்தான பாடல்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்……..

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திருமந்திரம் தொடர் ….1

  1. முனைவர் பா மஞ்சுளா எழுதிய திருமூலரின் திருமந்திரத்தின் முதல் தொடரே முத்தாக உள்ளது. சித்தர் மரபில் வந்த திருமூலர் உடம்பைக் கோயில் என்று பாடிய முதல் கவிஞர் என்பது சிறந்த பதிவு.
    உடம்பு கோயில் என்றால் , உயிர் இறைவன் என்று ஆகிறது. மூச்சு இல்லை என்றால், உயிர் உடலை விட்டு பறந்து விடும். எனவே நம் எல்லோரும் மூச்சுப்பயிற்சியை எவ்வாறு செய்வதை என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். முனைவர் பா மஞ்சுளாவுக்கு எனது பாராட்டுக்கள்

  2. அருமையான ஆரம்பம்; எளிமையான சிறந்த விளக்கம். இருவிதமான விளக்கங்களைப் படித்துள்ளேன். இது மூன்றாவது வகை.

    ஆகா! இறைவன் அவரவர் கருத்துக்கும் கற்பனைக்குமேற்ப சிந்தையில் உட்பொருளாக எழுந்தருளும் இயல்பை உணர்ந்து களித்தேன். அடுத்தடுத்தபாடல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.
    “ஒன்றவன் தானே” எனும் பாடல் ‘தானிருந்தான் உணர்ந்து எட்டே’ (8) எனவன்றோ முடியும்? ‘என்றே’ எனப் பதிவாகியுள்ளதே?- அன்புடன் சுட்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *