மீ.விசுவநாதன்
வாங்கும் கையாய் இல்லாமல் -தினம்
வழங்கும் கையாய் இருந்திடணும் !
தீங்கைத் தட்டிக் கேட்கின்ற – நல்ல
தீரன் கையாய் பலப்படணும் !

கண்ணீர் வழியும் கன்னத்தில் – பாசக்
கைகள் நீண்டு துடைத்திடணும் !
மண்ணைத் திருடும் கொள்ளையரை -உடன்
மடக்கிப் பிடிக்க மனம்வரணும் !

ஓட்டுப் போடும் முன்னாலே – ஓர்கணம்
உயர்ந்த நாட்டை எண்ணிடனும் !
நீட்டும் கையில் கறைகண்டால் -அதை
நியாயத் தீயால் பொசுக்கிடணும்!

மனிதன் எவர்க்கும் விலையுண்டு – மா
மனிதர்க் கதிலே விலக்குண்டு !
பனியில் அழுக்கு படியாது – தூய
பணியில் ஊழல் நுழையாது !

(26.04.2016 22.02pm)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பனியில் அழுக்கு படியாது

  1. மாமனிதர்க்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது என்ற புதிய சிந்தனை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. கவிஞர் மீ விசுவநாதனுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *