குமரி.எஸ். நீலகண்டன்.

இருளைக் கிழித்து

அடைத்த சன்னலை

இடைவிடாது

தட்டிக் கொண்டே

இருக்கிறது நிலா..


திரைமூடிய

கண்ணாடியின்

சிறு இடைவெளிக்குள்

எட்டியும் பார்க்கிறது.


உறுமும் குளிர்சாதன

அறையில் உறங்கும்

அவர்களின் செவிகளுக்கு

நிலாவின் அழைப்பு

எட்டவே இல்லை.அறையின் அகத்தில்

உறையும் குளிரில்

உறைந்து நிறைந்து

அறையின் சுவரில்

தன்னை வரைந்த

உறங்கும் குழந்தையை

உற்றுப் பார்த்துக்

கொண்டே இருக்கிறது

 

அழகான அந்த

நிலா ஓவியம்..

படத்துக்கு நன்றி..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க