மகனும் தாயும்
ரா.பார்த்தசாரதி
பிறந்த மேனியுடன் வெளியுலகிற்கு வந்தேன்
உனக்கு நான் மட்டற்ற மகிழ்ச்சி தந்தேன்
எனக்காக கண்விழித்து தூக்கத்தை மறந்தாய்
உன் குருதியை எனக்கு பாலாகப் பொழிந்தாய்
தோளையே தூளியாக்கி என்னை சுமந்து சென்றாய்
கேட்டால், பிறக்கும்போது ஏற்பட்ட சுமையும், வலியை விடவா என்கிறாய் !
உனக்கோ ஆயிரம் பிரச்சனை இருக்கும்
என்னை கட்டியணைப்பதில் தான் ஆனந்தம் இருக்கும் !
உனது மடியும், இருகால்களுமே எனக்குத் தொட்டில்
உனது மூச்சே எனக்கு அடைக்கலம் !
நான் தவறு செய்தாலும் என்னிடம் அன்புடன் நேசிக்கும்
நீயே எனது கண்கண்ட தெய்வமாகும் !
நல்லதொரு சிந்தனையை நன்றாக வடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.