-மீ.விசுவநாதன்
திருவேணும் என்போர்க் கெல்லாம்
–திருமாலின் பார்வை வேணும்!
திருவோண நாளில் பெருமாள்
–திருவடியை எண்ண வேணும்!
ஒருஅடியால் உலகைத் தொட்டு
–ஒருஅடியை விண்ணில் வைத்து
மறுஅடியைத் தலையில் ஆழ்த்தி
–மகாபலிக்கு ஞானம் தந்தான்!
சிறுவனாக வந்து உள்ளச்
–செருக்கினைத் துடைத்த போது
மறுபிறவி இல்லா மன்னன்
–மகாபலிக்கு மண்ணில் மீண்டும்
வரும்படிக்கு வரமும் தந்தான்!
–வரவேற்று மகிழ்ந்த மக்கள்
திரும்பியதம் மன்னன் கண்ட
–திருவோண தினமே வாழி!


Leave a Reply