மீ.விசுவநாதன்

aka
கற்கும் குணமே கலைவாணி !
கர்வம் துளியும் தலைகாட்டா
சொற்ப அறிவும் கலைவாணி !
சுடரும் ஒளியாய் விரிவானாய்
நிற்கும் கருணை கலைவாணி !
நிசமோ பொய்யோ உலகத்தில்
அற்பப் பொருளின் உயிர்க்குள்ளும்
ஆழ்ந்து கிடப்பாள் கலைவாணி !

புத்தம் புதிய மலர்போலே
பூமி முழுதும் அவள்மாயை !
பித்தன் எனக்குள் இயல்பான
பிரும நிலையும் அவள்சாயல் !
கத்துங் குழந்தை குரலுக்கும்
கணினி உலகின் திறனுக்கும்
வித்தை விதைக்கும் விவசாயி
வேதக் கருவாம் கலைவாணி !
(09.10.2016 19.38 pm)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *