தோல்வி
ரா.பார்த்தசாரதி
தோல்வி என்பது வெற்றியின் முதற் படி
தோல்வி என்பது விதியின் வலி அல்ல
அதுவே விதியை மாற்றும் வழியாகும்
தோல்வி என்பது தலைக்குனிவும் அவமானமாகும்
அதுவே தடை நீக்கும் அடையாளமாகும்
தோல்வி என்பது வெட்கப்படும் செயல் அல்ல
அதுவே வெற்றியை தூண்டும் வீரம்
தோல்வி என்பது முள்குத்தும் பாதையல்ல
அதுவே முன்னேற சொல்லும் பாடமாகும்
தோல்வி என்பது மிரளவைக்கும் பூதமல்ல
அதுவே அனுபவம் தரும் தேவதை
தோல்வி என்பது துன்பத்தின் நினைவலை
அதுவே நம்மை தூங்கவிடாத கனவு
தோல்வி என்பது கிழிந்த புத்தகம் அல்ல
அதுவே வாழ்க்கையின் சிறந்த புத்தகம்
தோல்வி என்பது பின்னிழுக்கும் பயமே
வெற்றியை எட்டி பிடிக்கும் துணிவே !
தோல்வி என்பது முட்டாள்களின் தலைவன் அல்ல
அது அறிவாளிகளின் ஆசிரியன்.
தோல்வியை ஏற்போம் ! துவளாமல் இருப்போம் !