நடா புயலே
ரா.பார்த்தசாரதி
புயல் என்றாலே மக்கள் மனதில் கலக்கம்
விபரீத விளைவுகள் ஏற்படும் என்கிற தயக்கம்
புயலால் சேதம் ஏற்படுமே என்ற தவிப்பு
மக்கள் மனதில் தவிர்க்கமுடியாத பதைபதைப்பு !
நடா புயலே ! எங்களை சேதப்படுத்தாமல் ஒதுங்கிடு
மக்கள் பணமில்லாமல் பொருள் வாங்க தவித்திடுது
மக்களிடத்தில்,பணம் எல்லாம் செல்லா காசாக மாறியது
இதனை கண்டு அரசும் என்ன செய்வதென்று தவிக்கின்றது !
புயலே ! என்று அரசும் உதவும் நிலையில் இல்லை
மக்கள் கையில் பணமும் அதிகம் இல்லை.
எங்கள் நிலையறிந்து சற்றே ஒதுங்குவாயா
எங்கள் வாழ்வினை நிலைபெறச் செய்வாயா !
புயலுக்கு பின்னே அமைதி என்றான் மனிதன்
அரசு முன்னெச்சரிக்கை செய்வதையும் கண்டான்
சீர்செய்ய அரசின் மெத்தன போக்கையும் கண்டான்
இயற்கையால் ஏற்படும் அழிவை தடுக்க வழி கண்டானா !