அழுதகண்ணீர்
ரா.பார்த்தசாரதி
அழுத கண்ணீர் என்றும் ஆற்றாமையை உணர்த்தும்
தொண்டுள்ளம், கொண்டு, மக்களின் பசியாற்றினார்
அவர் இறக்கும் போது கடல்நீரும் கண்ணீரில் கரையும்
அலை கடலென மக்கள் வெள்ளம் அஞ்சலி செய்ததே !
சாதனை படைத்தது வாழ்ந்து, வரலாறாக புகழ் ஓங்கியதே
மக்கள் மனதில் குடிகொண்ட தால் அம்மா என அழைத்தனரே
வினைத்திட்பம் கொண்டு எதிரிகளையும் எதிர்த்து நின்றாய்
அஞ்சி விடாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றாய் !
செய்வதை மட்டும் சொல்லிட வேண்டும்
சொன்னதை நிச்சயம் செய்திட வேண்டும்
நல்லதையே செய்ய நினைத்திடல் வேண்டும்
பாகுபாடின்றி செயலாற்றினால் புகழ் தேடி வரும் !