தன்னம்பிக்கை
ரா.பார்த்தசாரதி
மனிதன் வாழ தேவை தன்னம்பிக்கை
தன்னம்பிக்கையை இழந்தால் தைரியம் பிறக்காது
சோதனையை கண்டு என்றும் பயந்தவனுக்கு
சாதனை என்பது, என்றும் நடக்காது !
வாழ்க்கை என்பது பொதுவாய் அமைந்த நியதியடா
தைரியம் இல்லாத மனிதர்கள் பூமிக்கு சுமையடா
தோல்வியை தாண்டி சென்றாலே வெற்றி கிடைக்குமே
தொடர்ந்து முயற்சி செய்பவனுக்கே வெற்றி கிட்டுமே !
கடனே என்று வாழ்பவனுக்கு கடமையும் சுமைதான்
தென்றலின் இனிமையை புயலாய் நினைப்பான்
தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் நாணயத்தின் இரு பக்கங்களே
மனிதனின் பலம் நம்பிக்கையிலே, யானையின் பலம் தும்பிக்கையிலே!
உலகில் மனித நேயத்துடன் பழகு !
தாமே வந்திடும் புகழ் உனக்கு
சோர்வையும், சோம்பேறித்தனத்தை அறவே நீக்கு
வாழ்வில் வெற்றியினை எப்போதும் உனதாக்கு !