பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

 

 

image (1)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

[34]  உருளும் மேலகம் நோக்கிக் கேட்டேன்,

ஊழ்விதிக்கு வழிகாட்டுவ தெந்த விளக்கு ?

இருட்டில் தடுமாறு கிறார் அதன் மதலையர்

குருட்டுப் புரிதலது !’ எனப்பதில் தரும் மேலகம்.

 

[34]
Then to the rolling Heav’n itself I cried,
Asking, ‘What Lamp had Destiny to guide
Her little Children stumbling in the Dark? ‘
And – ‘A blind Understanding! ‘ Heav’n replied.

 

 

[35] எளிய மண் கலைய உதட்டில்  உணர்ந்தேன்

வாழ்வின் இரகசிய  ஊற்றுக் கிணறு ஒன்றை,

வாயிக்கு வாய் முணுக்கும், “வாழும் போதே 

மதுவைக் குடி ! ஏனெனில் செத்தபின் மீளாய் நீ

 

[35]
Then to the Lip of this poor earthen Urn
I lean’d, the secret Well of Life to learn:
And Lip to Lip it murmur’d – ‘While you live,
Drink! – for, once dead, you never shall return.’

 

 

[36]  ஓடுகாலி உடன்செலும் படகு சொல்லும்

ஒரு சமயம் தெளிவாய் வாழ்ந்தேன் மகிழ்ந்து,

குளிர்ந்த உதட்டில் ஒருதரம் முத்த மிட்டால்,

எத்தனை முத்தம் ஏற்கும் பின்பு கொடுக்கும் ?

 

[36]
I think the Vessel, that with fugitive
Articulation answer’d, once did live,
And merry-make, and the cold Lip I kiss’d,
How many Kisses might it take – and give!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

  1. மொழிபெயர்ப்பு நன்றாக உளது. வாழ்க ஜெய்.. தொடர்க உம் பணி
    யோகியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *