ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாள், பகவான் அரவிந்தர் பிறந்த தினம்….!
——————————————————————————————————————————-

FullSizeRender
”வரவிந்த பூமிக்கு வேதாந்த சிங்கம்
அரவிந்த தேவா, அடியேன் -பெறவந்தேன்
தேசிய ஜெண்டா திருநாளில் நாடக
ஹாஸியப்பூச் செண்டை அருள்”….
”திருவள்ளூர் ராமர், திருவல்லிக் கேணி
கருவறையில் ராயர் கரத்தில், -சிறையுள்ளில்,
தேவகிக்கு தோன்றி திருஆயர் பாடியில்
கோவகிக்கும் கண்ணன் களிப்பு’’….

’’ஆழ்மனம் கொண்ட அமைதியே ஆண்டவன்:
பாழ்மன புத்திப் புரவியில் -தாழ்வுற,
டொக்டொக்டொக் என்று தரையில் உலவாது
டக்கென்று வானுக்குத் தாவு’’

‘’பார்த்தனின் சாரதி, பார்த்தன் பரிதவிக்க,
கீர்த்தனை செய்தனன் கீதையை, -தீர்த்தம்
திருவல்லிக் கேணி திகழ்பெரிய தெய்வம்
கருமல்லிக் கண்ணனே காப்பு”….கிரேசி மோகன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.