வல்லமை மின் இதழ் மேம்பாட்டுச் சந்திப்பு
தமிழ்த்தேனீ
ஆகஸ்ட் 15ம் நாள் நம் இந்திய தேசத்தின் விடுதலை நாள் அன்று திரு. மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற ”வல்லமை மின் இதழ்” மேம்பாட்டுச் சந்திப்பில் பங்கு கொண்டேன்.
வாழ்க்கையில் பல பொன்னான தருணங்கள் நமக்கு அமையும். அது போன்ற ஒரு நல்ல தருணம் அமைந்தது இந்த சந்திப்பில். பல அறிஞர்களை சந்தித்ததில் பெருமகிழ்வு அடைந்தேன். மிகவும் உபயோகமான சந்திப்பு.
திரு அண்ணா கண்ணன் அவர்களும் பவளசங்கரி அவர்களும் என் வீட்டிற்கு வருவதாக கூறியவுடன் மகிழ்ச்சி அடைந்தேன்! அவர்களுடன் சேர்ந்து பயணித்து திரு மறவன் புலவு சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தை அடைந்தோம்.
உள்ளே நுழைந்தவுடன் மகிழ்ச்சியாக, இனிமையாக திரு மறவன் புலவு சச்சிதானந்தன் வரவேற்பு அளித்தார். ஒரு சொந்த சகோதரன் வீட்டிற்குள் நுழைவதைப் போன்ற உணர்வை அனுபவித்தோம்.
அதன் பிறகு வயிற்றுக்கு உணவு சிற்றுண்டிகள், பானம் அளிக்கப்பட்டது. அதன் பிறகு நிறைந்த வயிறுடன் வல்லமை இதழின் முன்னேற்றம், வருங்காலக் கனவுகள், வருங்காலத் திட்டங்கள் பற்றி திரு அண்ணா கண்ணன் அவர்கள் கணினியின் உதவியுடன் விவரித்தார்.
அந்த சந்திப்பிற்கு வருகை தந்தவர்கள் பட்டியல் கீழ்வருமாறு
திரு விஜயதிருவேங்கடம், திரு மோகனரங்கன், திரு அண்ணா கண்ணன், திரு சூர்யாசுரேஷ் (பட்டர்ஃப்ளை சுரேஷ்), காமேஷ் தம்பதியினர், திருமதி சுபாஷிணி (டீ. திருமலை ஸ்ரீவில்லி புத்தூர்), திருமதி பவளசங்கரி அவர்கள்.
திருமதி சுபாஷிணி அவர்கள் பொதிகைமலைச்சாரல் பற்றியும், திரு டீ கே சீ அவர்களைப் பற்றியும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
இதன் இடையில் கவிதாயினி மதுமிதா அவர்களும் இணையத் தொடர்பு மூலமாக அனைவரையும் நலன் விசாரித்தார், வல்லமை இதழின் மேம்பாடு பற்றியும் பேசினார்.
திரு. இன்னம்பூரான் அவர்களும் இணையம் மூலம் தொடர்பு கொண்டு வல்லமை இதழ் மேம்பாடு குறித்து பயனுள்ள பல யோசனைகள் கூறினார்.
வல்லமை இதழின் மேம்பாடுகளுக்கு பலவிதமான உபயோகமான யோசனைகளை திரு விஜய திருவேங்கடம் அவர்களும் கூறினார்.
அப்படி யோசனைகள் கூறும்போது மொழி நடையைப் பற்றிய விவாதத்தில் பங்கு கொண்டு திரு மோகன ரங்கன் அவர்கள் “மொழி நடைக்கு தடை போடக் கூடாது” என்பதை வலியுறுத்தினார்.
வந்திருந்த அனைவருமே பலவிதமான யோசனைகளைக் கூறினர். அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி திரு அண்ணா கண்ணன் அவர்கள் கௌரவித்தார்.
உணவு இடைவேளைக்கு அவர்கள் வீட்டின் அருகே இருந்த அசோகா உணவு விடுதியில் அனைவரும் உணவு உண்டோம்.
மொத்தத்தில் மிகவும் உபயோகமான சந்திப்பாக இந்த சந்திப்பு அமைந்தது.அடிக்கடி இது போன்ற சந்திப்பு நிகழ்ந்தால் நிச்சயம் பயன் கிடைக்கும் என்று தோன்றியதுதிரு அண்ணா கண்ணன் வல்லமை இதழின் முன்னேற்றத்துக்காக பலவிதமான நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறார். வல்லமை இதழ் வல்லமையோடு இனிதே வளரும் என்கிற நம்பிக்கை பிறந்தது!
வல்லமை மின்னிதழ் எப்படி…? இப்படி மெருகு கூடிகொண்டே போகிறது என்று யோசித்துகொண்டிருத நேரத்தில் திரு.தமிழ்த்தேனி அவர்களின் இந்த சந்திப்பு பதிவுகள் எனக்குள் ஒரு தெளிவினை கொடுத்தது. இது போன்ற சந்திப்புக்களினால்… உண்டாகும் ஆக்கபூர்வமான செயல்களினால் கண்டிப்பாக வருங்காலத்தில் நமது வல்லமை மின்னிதழ் பெரும்புகழ் பெறும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. “சந்திப்பு” செய்தி மிகவும் கால தாமதமாக பதிவாகியிருக்கிறது. இன்னமும் முன்னமே பதிவு செய்து இருக்கலாம்.
தாமதமாக பதிவு செய்தாலும் நிறைவாக பதிவு செய்தமைக்கு திரு.தமிழ்தேனி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்பான வணக்கங்கள்.
வல்லமை வளரும்!
வல்லமை வெல்லும்!
கலந்துகொள்ள முடியாமைக்காக வருந்துகிறேன்!
நாம் வல்லமையை மேம்படுத்த மீண்டும் கூடுவோம்!
வல்லமையின் வலிமையை உலகெங்கும் உணரச்செய்வோம்
வாழ்த்த வயதில்லையாகையால் வல்லமையின் அறிஞர்களை வணங்கி, நண்பர்களின் நல்வாழ்த்துக்களை வாங்கி, அம்மாக்களின் ஆசிகளுடன் நான் என் பணிகளைத் தொடருவேன்! நன்றி!