கனம் கோர்ட்டார் அவர்களே! – 2

3

இன்னம்பூரான்

 


ஒரு ஸ்வாதந்தர்யத்துடன் தொடருகிறேன். அமெரிக்கா போகிறோம். நாடகமேடையல்ல. தர்மதேவதை தரிசனம்! டுவானெ பக் செய்யும் பிரார்த்தனை: ‘பரமபிதாவின் புகழோங்குக. அவருக்கே புகழ். அவரது கருணையே தீர்வு. நான் மகிழ்வுடன் உள்ளேன்.’ இடம்: மரணதண்டனை அறை.   90 நிமிடங்களே முன்னால் வந்த உச்சநீதி மன்றத்தின் ஆணையினால் தண்டனை தற்காலிகமாக, நிறுத்தப்பட்டது. அந்த ஆணை இங்கே:

(ORDER LIST: 564 U.S.)

11-6391 (11A297)

THURSDAY, SEPTEMBER 15, 2011 ORDER IN PENDING CASE

BUCK, DUANE EDWARD V. THALER, DIR., TX DCJ The application for stay of execution of sentence of death presented to Justice Scalia and by him referred to the Court is granted pending the disposition of the petition for a writ of certiorari. Should the petition for a writ of certiorari be denied, this stay shall terminate automatically. In the event the petition for a writ of certiorari is granted, the stay shall terminate upon the sending down of the judgment of this Court.

~http://www.supremecourt.gov/orders/courtorders/091511zr1.pdf

புரிகிறது. ஆனால் புரியவில்லை. லத்தீன் மொழி சொற்கள் அப்படி. அதை பிறகு பார்க்கலாம். விஷயத்திற்கு வருவோம். டுவானெ பக்  ஜூலை 1995 ல் தன்னுடைய தோழி டெப்ரா கார்ட்னர், அவளுடைய நண்பர் கென்னெத் பட்லர், அவருடைய சகோதரி ஃபில்லிஸ் டேலர் ஆகியோரை சுட்டுவிட்டார். மரணதண்டனை. உயிருடன் தப்பிய ஃபில்லிஸ் டேலர் இவருடைய உயிரை காப்பாற்ற வழக்காடினார். பிரயோஜனமில்லை. ஆனால், பிடித்துக்கொள்ள ஒரு கொம்பு. ஆறு மரணதண்டனை வழக்குகளில் வால்டர் க்யூஹனோ என்ற உளவியல் நிபுணர் அளித்த சாட்சியத்தில், இனவெறி போன்ற இழுக்கு. ஐந்து வழக்குகள் மேல் முறையீடுகள் முடிந்தபின் மரணதண்டனை ஊர்ஜிதத்தில் முடிந்தாலும், டுவானெ பக்கின் வழக்கில் முறையீடுகள்  முடியவில்லை. இது 2000த்திலேயே டெக்ஸாஸ் அட்டர்னி ஜெனெரலே சொன்னது. ஃபில்லிஸ் டேலரின் தரப்போ கிருத்துவ சமய போதனைக்கு பணிந்து அவரை மன்னித்துவிட்டதாகக் கூறியது. அவரைத் தண்டிக்கக் கோரி வழக்கு நடத்திய லிண்டா கெஃப்பன் என்ற அரசு வக்கீலே இவரைக் காப்பாற்ற வேண்டி நடவடிக்கைகள் எடுத்தார். அவற்றின் மையம்: வால்டர் க்யூஹனோ என்ற உளவியல் நிபுணர் ஜூரர்களின் மனதை குலைத்து விட்டார். கருப்பர் என்ற ஒரே காரணத்தால், அவரால் சமுதாயத்திற்குக் கேடு விளையக்கூடும் என்றார். இது இனவெறி இழுக்கு.  இந்த வாதத்தை மதித்து, உச்சநீதி மன்றம் இந்த தற்காலிக தடையை விதித்து, உயர் நீதி மன்றம் மறு பரிசீலனை செய்ய ஆணையிட்டது. டுவானே பக் தரப்பு வக்கீல் கேட் ப்ளேக் கூறுகிறார் இன்று: ‘ நிறபேதத்தின் அடிபடையில் இனி யாருக்கும் மரணதண்டனை விதிக்கலாகாது. இனவெறி அற்ற நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.”

மேற்படி வழக்கு விவரங்களை ஒரு டெக்ஸாஸ் மாநில நாளிதழிலும், லண்டன் முற்போக்கு கார்டியன் இதழிலும், ஹிந்து நாளிதழிலும் படித்தேன்.டெக்ஸாஸ் மாநில நாளிதழ் முழு விவரம் அளித்தது; கார்டியன் அலசியது; ஹிந்து: செய்தி துளி.

கார்டியன் அலசல்: இது ஒரு டெக்ஸாஸ் பண்பு எனலாமோ? வெள்ளையர்-ஜூரி கருப்பர்களால் அபாயம் கூடுகிறது என்று அங்கு நம்புவதாக ஒரு 2001 ஆய்வு கூறியது. அமெரிக்கன் உளவியல் -மருத்துவக்கழகமே இந்த அணுகுமுறையை எதிர்க்கிறது. கவர்னர் ரிக் பெர்ரி அங்கு பிரச்சனை இல்லை என்கிறார். ஆனால். அந்தோனி க்ரேவ்ஸ் என்பவர் அங்கு தான் 12 வருடங்கள் மரண வரிசையில் இருந்து போன வருடம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். 1973 லிருந்து இன்று வரை 12 பேர், இவ்வாறு மரணத்தின் வாயிலிருந்து தப்பியிருக்கிறார்கள்.

இந்தத் தீர்ப்பை நான் அவசரம் அவசரமாக முன்னிறுத்துவதின் நோக்கம்: சட்டத்தை விட நியாயம் முக்கியம். அதை விட தர்மம் சிலாக்கியம் என்பதை கூறுவதே. இதற்கும், இந்தியாவில் சூடாக விவாதிக்கப்படும் மரணதண்டனை விஷயங்களுக்கும் சம்பந்தமில்லை. நிலைப்பாடுகள் பெரிதும் வித்தியாசப்படுகின்றன.

 

(தொடரும்)

 

இன்னம்பூரான்
16 09 2011

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “கனம் கோர்ட்டார் அவர்களே! – 2

  1. நியாயத்தை(Justice) நிலை நிறுத்தும் வகையில் சட்டம்(Law) தண்டனைகளை(Punishment) வழங்க வேண்டும். இதில் எக்காரணம் கொண்டும் அரசியல், நிறவெறி, சிறுபான்மை, மொழி வெறி போன்றவை எக்காலத்திலும் தலையிடக் கூடாது.

  2. சட்டம் எதற்கும், எப்போதும் வளைந்து கொடுக்கக்கூடாது இல்லையா?? நியாயத்தை விடவும் தர்மம் சிலாக்கியம் தான் என்றாலும் அவரவர் தர்மமும் வித்தியாசமான கோணங்களில் பார்க்கையில் மாறுபட்டே வருகிறது. என் வரையில் தர்மம் என்றால் மற்றவருக்கு அது அதர்மம். பொதுவாக அரசதர்மம் மாறுவது இல்லை. ஆகையால் இங்கே நியாயம், தர்மம் ஆகியன பொருந்தி வந்து சட்டமும் வளையாமல் நீதியை நிலைநாட்ட வேண்டும்.

  3. உலகமே நாடக மேடை
    இதில் அமெரிக்கா என்ன, இந்தியா என்ன

    நியாயம் வழங்கப்படுமானால் ,தர்மம் வெற்றி பெறுமானால்

    சட்டம் தேவையே இல்லை

    இப்போதைய சட்டம் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *