பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

22359423_1449646335089561_257837991_n
கோகுல்நாத் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (28.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி (132)

  1. தமக்கையும் தாயாவாள் : பச்சை வண்ண ஆடை கட்டிய மலை மகள்!
    மலை மகள் அருகே குழந்தைகளோடு நிற்கும் தாய் இவள்!
    பிள்ளைகளைப் பெற்றுத் தந்ததால் அவள் பெற்றவள்!
    அன்னையாய் இவளை அடைந்ததால்
    இப்பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்!
    கல்விச்சாலைக்கு செல்ல காத்திருக்கும் பிள்ளைகள்!
    நாளைய நல்ல பாரதத்தை நிர்மாணிக்க ,
    காத்திருக்கும் சிற்பிகள்!
    பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடம் கட்டிவைத்து!
    கல்விக் கண் திறந்து வைத்த கர்ம வீரன் காமராசர்!
    கனவுகளை நனவாக்க வந்த நல்முத்துக்கள்!
    அக்கா வார்த்தைகளை அப்படியே கேட்கின்ற!
    அன்புத் தம்பிதனை இங்கே பாருங்கள்!
    தமக்கையும், இன்னொரு தாய், தம்பிக்கென்ற!
    உண்மையை உணருங்கள்!.
    திலகவதியார் வளர்ப்பாலே, மருள் நீக்கியார்
    நாவுக்கரசரானது நாமறிவோம்!
    குந்தவை வளர்ப்பாலே, ராச ராச சோழன்
    சிகரம் தொட்டதை நாமறிவோம்!
    அருணகிரி நாதர், முருகன் அருள் பெற்றதும்
    அக்கா வளர்ப்பாலே! நாமறிவோம்!
    தமக்கை இருந்துவிட்டால்! தம்பியர் வாழ்க்கை எல்லாம்!
    தரணியில் உயர்ந்தோங்கும்!

  2. கொழுந்தெடுக்க யாருமின்னும்
    கூடிடாத காலையில்
    குழந்தைகளைப் பள்ளிக் கூடம்
    கூட்டிச் செல்லும் தாயுடன்
    விளைந்த தேயிலைப் பரப்பின்
    விளிம்பிலுள்ள வீதியில்
    விருப்ப மின்றிப் பள்ளி போக
    வெறுத்த தம்பி சொல்கிறான்

    தம்பி-
    பச்சைவயல் அழகாகப் படர்ந்திருக்கு தேக் கொழுந்துப்
    பற்றையெல்லாம் ஓடி விளையாடி – நாம
    இச்சைப்படி இன்பமாக இந்த நாளைக் கழிச்சிடலாம்
    என்னோட நீயும் கூட வாடி!

    அக்கா-
    நீட்டுத் தேர்வில் நீயும் நானும்
    நெறைய மார்க்கு வாங்க வேணும் தம்பி -அதுக்கு
    நேரகாலத்தோட நாம
    பாதை போட்டு வச்சுக்கணும் தம்பி.
    ஆட்டுவிக்கிற அம்மாவுக்கும்
    அது தாண்டா ஆனந்தம் தம்பி
    அதுக்காச்சும் பள்ளிக்கூடம்
    அலுப்பில்லாமப் போக வேணும் தம்பி.

    அடை மழை வந்தாலு மெண்ணு
    கொடயக் கையில எடுத்துக்கிட்டு
    கூட்டிப் போற அம்மாவுக்குத் தம்பி-நல்ல
    பாட்டி போட மார்க் கெடுத்து
    பரீட்சையில பாஸு பண்ணி
    காட்ட வேணும் திறமையெல்லாம் தம்பி.

    இப்பருந்தே படிச்சாத்தான்
    எதிர்காலம் நமக்கிருக்கும்
    தப்ப விட்டா தோத்துப் போவம் தம்பி-நாம
    எப்ப வேணு முண்ணாலும்
    எறங்கி விளையாடிக்கலாம்
    இப்ப போவம் பள்ளிக்கூடம் தம்பி.

    அன்னை-
    நெஞ்சமெங்கும் தன் குழந்தை
    நீட்டுத் தேர்வில் வெல்லணும்
    கொஞ்சமும் குறைந்திடாது
    மார்க்கு வாங்கிக் கொள்ளணும்
    தஞ்சமது கல்விதான் தமக்கு என்று தாயவள்
    தன்குழந்தை சொல்லும் வார்த்தை
    தன்னிலே மகிழ்கிறாள்.

  3. மாற்றுத் தாய் இவளடா..தம்பி..!
    ———————————————-

    வெறுப்பு காட்டாதேயடா தம்பி இவள் வேலைக்கு வந்தவள்தானே என்று,
    அக்கா நான் கூறும் பேச்சை கேள் அமைதியாய் நீ நின்று,

    அன்னைக்கோ நேரமில்லை அன்புகாட்ட,
    தந்தைக்கு நேரமில்லை பாசம் காட்ட,

    வேலைக்கு ஆளிருக்கு என்று அடிமையென இவளை ஏவி விட்டு,
    காசுக்கு அடிமைகளாய்
    கம்பெனிக்கு சென்றுவிட்டார் நம் பெற்றோர்.

    நாம் கண்விழிக்கும் காலை முதல், கால்பதித்த பள்ளிவரை,
    உணவு ஊட்டி உறக்கம் காட்டி,
    காசு வாங்கி பாசம் காட்டும், கண்ணியமான அன்னையிவள்.

    பட்டுத்துணியும் கட்டுப் பணமும் தராத பாசத்தை,
    தட்டுநிறை உணவு தீர்க்காத நம் பசியை,
    தேக்கு கட்டிலும், பஞ்சு மெத்தையும் கொடுக்காத உறக்கத்தை, அடிமையென வந்தஇவள் அற்புதமாய் தந்தனளே

    முதல் தரத்து தேயிலைகள் வெளிதேசம் போவது போல்,
    வெளிநாட்டு கம்பெனியில் அடிமையாய் போயினரே நம் பெற்றோர்.
    மூன்றாம் தர தேயிலைகள் தாய்நாட்டில் சுவைப்பதுபோல், தாய்ப்பாசம்தனை காட்டி நம் வாழ்வில் சுவை ஊட்டுகிறாள், வேலைக்குவந்த இவள்.

    வேசம் காட்டி நாசம் செய்யும் வஞ்சக உலகினிலே,
    பாசம் காட்டும் பாமரப் பெண்ணிவளை
    நாசம் செய்யாதே உன் கடும் சொல்லால்,
    மோசம் ஒன்றும் போக மாட்டாய் அவள் அன்பை ஏற்றுக் கொண்டாள்.

    எதிர்காலம் என்ற கணக்கை நோக்கி பணத்தை சேர்க்க ஒடுகின்ற பெற்றோர் நமக்கிருந்தாலும்,
    அன்னை போல அன்புகாட்ட தந்தைபோல பாசம் காட்ட அடிமையிவள் இல்லையென்றால் அன்புக்கு ஏங்குகின்ற அனாதைகளே நாமுமின்று.

    அன்னையென பாவித்து அவள் மடி நீ சாய்ந்திட்டால், வின்னையும் வளைத்திட்ட சந்தோசம் கொண்டிடுவாள்,
    ஆசையாய் நீ பேசிவிட்டால், அகிலத்தையே தந்திடுவாள்.

  4. இன்னொரு அன்னை…

    வெளியூரு போன அப்பா
    வரவில்லை நெடுநாளா..

    வெளியே காட்டாமல் துக்கத்தை,
    வெயிலினிலும் மழையினிலும்
    தேயிலை பறித்துத் தேய்ந்து
    வேலை பார்த்து நம்மைப்
    படிக்கவைக்கிறாள் அம்மா..

    வேடிக்கை விளையாட்டு
    வேண்டாமடா தமபி இப்போது,
    நன்றாய் நாம் படித்து
    நல்லபெயர் எடுப்போம்,
    பொல்லாத உலகத்தில்
    பெற்ற தாய்க்குப்
    பெருந்துணையாய் இருப்போம்
    அவள்
    பேர் சிறக்க வாழ்வோம்..

    அங்கே பிறக்கிறாள்
    அக்கா உருவிலோர்
    அன்னை…!

    -செண்பக ஜெகதீசன்…

  5. மாற்றுத் தாய் இவளடா..தம்பி..!
    ———————————————-

    வெறுப்பு காட்டாதேயடா தம்பி இவள் வேலைக்கு வந்தவள்தானே என்று,
    அக்கா நான் கூறும் பேச்சை கேள் அமைதியாய் நீ நின்று,

    அன்னைக்கோ நேரமில்லை அன்புகாட்ட
    தந்தைக்கு நேரமில்லை பாசம் காட்ட.

    வேலைக்கு ஆளிருக்கு என்று அடிமையென இவளை ஏவி விட்டு,
    காசுக்கு அடிமைகளாய்
    கம்பெனிக்கு சென்றுவிட்டார் நம் பெற்றோர்.

    நாம் கண்விழிக்கும் காலை முதல்
    கால்பதித்த பள்ளிவரை,
    உணவு ஊட்டி உறக்கம் காட்டி
    காசு வாங்கி பாசம் காட்டும்க
    ண்ணியமான அன்னையிவள்.

    பட்டுத்துணியும் கட்டுப் பணமும் தராத பாசத்தை
    தட்டுநிறை உணவு தீர்க்காத நம் பசியை
    தேக்கு கட்டிலும், பஞ்சு மெத்தையும் கொடுக்காத உறக்கத்தை
    அடிமையென வந்த இவள் அற்புதமாய் தந்தனளே!

    முதல் தரத்து தேயிலைகள் வெளிதேசம் போவது போல்,
    வெளிநாட்டு கம்பெனியில் அடிமையாய் போயினரே நம் பெற்றோர்.
    மூன்றாம் தர தேயிலைகள் தாய்நாட்டில் சுவைப்பதுபோல்,
    தாய்ப்பாசம்தனை காட்டி நம் வாழ்வில் சுவை ஊட்டுகிறாள்
    வேலைக்குவந்த இவள்.

    வேசம் காட்டி நாசம் செய்யும் வஞ்சக உலகினிலே,
    பாசம் காட்டும் பாமரப் பெண்ணிவளை
    நாசம் செய்யாதே உன் கடும் சொல்லால்
    மோசம் ஒன்றும் போக மாட்டாய்
    அவள் அன்பை ஏற்றுக் கொண்டால்..!

    எதிர்காலம் என்ற கணக்கை நோக்கி
    பணத்தை சேர்க்க ஒடுகின்ற பெற்றோர் நமக்கிருந்தாலும்,
    அன்னை போல அன்புகாட்ட
    தந்தைபோல பாசம் காட்ட
    அடிமையிவள் இல்லையென்றால்
    அன்புக்கு ஏங்குகின்ற அனாதைகளே நாமுமின்று.

    அன்னையென பாவித்து அவள் மடி நீ சாய்ந்திட்டால்,
    விண்னையும் வளைத்திட்ட சந்தோசம் கொண்டிடுவாள்.
    ஆசையாய் நீ பேசிவிட்டால்,
    அகிலத்தையே தந்திடுவாள்.

    -சொல்லின் செல்வி

  6. தேயிலை தோட்டத்தில் தேய்த முகத்திற்க்கு பின்னால் நிற்க்கும் தேன்இதழ் செல்வங்கள்…

  7. எங்கள் அன்னை..!
    ===============

    எழில்கொஞ்சும் பசுமைத் தோட்ட மருகே..
    …………எதிர்காலக் கனவுகளை ஏந்திய நினைவுடன்.!
    அழகாய் மகிழும் குழந்தைகள் அவளருகே..
    …………ஆனந்தமாய் பள்ளி செல்லும் எண்ணமுடன்.!
    ஒழுக்கமுடன் வளர்ந்து அவர்கள் உலகிலோங்க..
    …………உற்றதுணையாக என்று மிருப்பார் அன்னை.!
    நிழலாய்த் தம் பிள்ளைகளைத் தொடருவார்..
    …………நெறியாய் வளர்ப்பதில் கவனமிகு கொள்வார்.!

    கண்ணாகப் பெற்ற குழந்தையுடன் மகிழ்வார்..
    …………கனிவான அன்பை அளவின்றிக் கொடுப்பார்.!
    கண்ணசையா கவனமுடன் அவரைக் காத்து..
    …………கருத்துடனே பள்ளிசெல்ல தினம் அனுப்புவார்.!
    வண்ண சீருடையில் பள்ளிசெலும் அவர்களை..
    …………வாழ்த்துடன் முத்தம் பொழிந்து அனுப்புவார்.!
    எண்ணமுதச் செய்கையால் அன்னை என்பவள்..
    …………எப்போதும் இதயத்தில் நிறைந்தே இருப்பாள்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *