திருமால் திருப்புகழ்

கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

 

unnamed
’’ தாய்க்கட்டு தாமோதர் கைக்கெட்ட பூதேவி
வாய்க்கெட்ட வைக்கின்றாள் வையத்தை(மண்ணை), – சேய்த்தொட்டில்
விட்டிறங்கி வீதிவலம் வந்திடும் வேளையில்
தொட்டனள் விக்ரமர் தாள்’’….!

‘’அயி கிரி நந்தினி மெட்டில்’’
——————————————————-
“அளிவரம் உக்ரமம் ஒளியரி அக்ரமம்
உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
வடிவினில் திக்கது தொட்டவரே!
புலனுரு வாமனம் பழகிட நீமனம்
பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
சரணடை கோவண சந்நிதியில்”…
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….கிரேசி மோகன்….!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க