பல்கலைக்கழக மானியக் குழுவில் மாற்றம் ?

பவள சங்கரி

 

தலையங்கம்

 

பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைப்பதாக இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உயர் கல்வி ஆணையமானது நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மேம்படுத்துதல் ஆலோசனை வழங்குவது மட்டும் அளிக்கும். நிதியுதவி அளிக்கும் அதிகாரம் எம்.எச்.ஆர்.டி. அமைச்சகத்திடம் வழங்கப்பட்டுவிடும் என்ற கருத்து நிலவி வந்தது. தற்போது நிதியளித்தல் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இயங்கி வந்த பல்கலைக்கழக மானியக் குழுவே ஓரளவிற்குச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிற நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவிற்குப் பதிலாக உயர் கல்வி ஆணையத்தின் தேவை என்ன. சிறு குறைகள் ஏதும் இருந்தால் அதை மட்டும் நிவர்த்தி செய்வதை விட்டு அந்த அமைப்பையே மாற்றி அதிகாரமற்ற அமைப்பாக மாற்றுவது எவ்வாறு சரியான முடிவாக இருக்கும். சில முக்கியமானத் திட்டங்கள் செயலாக்கம் செய்தால் மட்டும் நிதியளிக்கப்படும் என்ற கட்டுப்பாடு இருக்கும் வகையில், தேர்தல் ஆணையம் போன்று அரசியல் குறுக்கீடு அற்ற பல்கலைக்கழக மானியக் குழுவே சிறப்பான ஒன்றாக இருக்கும். இல்லையென்றால் ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கருத்துகளைப் பிரதிபலிக்கக்கூடிய நிறுவனங்களுக்கும், ஆட்சியாளர்களின் கருத்துகளை ஏற்பவர்களுக்கும் மட்டுமே நிதி சென்றடையும் என்பதே நிதர்சனம்.

1 thought on “பல்கலைக்கழக மானியக் குழுவில் மாற்றம் ?

  1. பேராசிரியருக்கு வணக்கம்
    உங்கள் கருத்து உண்மையில் வரவேற்கத்தக்கது. பல்கலைக் கழக மானியக்குழுக் கொண்டுவரும் பல திட்டங்கள் எதிர்காலக் கல்வித் தரத்தை மேலும் உயரச் செய்யும். அதுமட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க NET-EXAM போன்றவற்றின் மூலம் தேர்ந்தெடுக்கிறது. தற்போது ஆசிரியருக்களுக்கே புதிய நடை முறைகள். இவைகளைக் கொண்டு ஆராயுங்கால் தங்கள் கூறிய கருத்து சால பொருந்துகிறது.

Leave a Reply

Your email address will not be published.